மதுரை: சேலம் மாவட்டம், முல்லைக்காடு பகுதியைச் சேர்ந்தவர், குணசீலன் (26). இவர், மதுரை சாத்தமங்கலத்தில் தங்கி, ஹோட்டல் ஒன்றில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். இவர், கடந்த 6 மாதங்களாக ஆன்லைன் ரம்மி விளையாடி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதில், தான் சம்பாதித்த மொத்த பணத்தையும் அவர் தொடர்ந்து ரம்மி விளையாடி இழந்ததால், நேற்றிரவு (பிப்.05) தற்கொலை செய்து கொண்டார். இதனையறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், உயிரிழந்த இளைஞரின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக மதுரை இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, குணசீலனின் சகோதரர் பசுபதி கொடுத்தப் புகாரின் அடிப்படையில் அண்ணாநகர் காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தால் தொடர்ந்து அப்பாவி மக்கள் உயிரிழந்து வரும் நிலையில் இது குறித்து அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: விழுப்புரம் அரசு கல்லூரி மாணவி தற்கொலை.. போலீசார் தீவிர விசாரணை!