ETV Bharat / state

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞர் கைது! - மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை: குலமங்கலம் பகுதியில் 11 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வாலிபர்
வாலிபர்
author img

By

Published : Oct 23, 2020, 10:23 AM IST

Updated : Oct 23, 2020, 2:27 PM IST

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே குலமங்கலம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார் (21). பெயிண்டராக வேலை செய்து வரும் இவர் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற நிலையிலிருந்த 11 வயது சிறுமியை, கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு குலமங்கலம் பகுதியில் பெற்றோருடன் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர். இதனிடையே வயிற்று வலியால் அவதிபட்ட சிறுமி அருகிலுள்ள குலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பரிசோதனைக்கு சென்றார். பிரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருந்ததும், அவருக்கு 11 வயது தான் நிரம்பியது என்று தெரிந்ததும் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவித்த தகவலின்பேரில், அலங்காநல்லூர் காவல்துறையினர் விசாரணை செய்து, 11 வயது சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக அருண்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் இத்திருமணத்திற்கு உடந்தையாக இருந்த அருண்குமாரின் தந்தை பரதன், தாய் லட்சுமி ஆகியோரையும் கைது செய்து, அலங்காநல்லூர் காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பட்டப்பகலில் படுகொலை - 3 மாதங்களுக்குப் பிறகு குற்றவாளி கைது!

Last Updated : Oct 23, 2020, 2:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.