மதுரை மாவட்டம், சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக 51 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை கைது செய்த காவல் துறையினர், நேற்று (ஜூன் 10) மதுரை, மத்திய சிறைச் சாலையில் உள்ள பெண்கள் சிறையில் அவரை அடைத்தனர்.
இந்நிலையில், அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் சிறை வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதனால், சுப்பிரமணியபுரம் காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் கத்திக்குத்தில் காயமடைந்த காவலர் உயிரிழப்பு!