ETV Bharat / state

கரோனா நோயாளிகளை கண்காணிக்கும் வயர்லெஸ் சென்சார் கருவி! - Wireless corona patient tracking device

கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை எளிமையாக கண்காணிக்கும் வகையில் இந்தியாவிலேயே முதல் முறையாக வயர்லெஸ் சென்சார் கருவிகள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

வயர்லெஸ் சென்சார் கருவி
வயர்லெஸ் சென்சார் கருவி
author img

By

Published : Sep 25, 2021, 6:53 PM IST

மதுரை: அரசு ராஜாஜி மருத்துவமனையில் தனியார் நிறுவனம் சார்பாக ரூபாய் 85 லட்சம் மதிப்பிலான ஆயிரம் வயர்லெஸ் சென்சார் கருவிகள், அதற்கான கட்டமைப்புகளை தமிழ்நாடு நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று (செப்.25) தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல், தனியார் நிறுவன இயக்குநர் ஹரி சுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த வயர்லெஸ் கருவியின் மூலம், அதிகமான நோயாளிகளின் இதய இயக்கத்தை ஒரே நேரத்தில் கண்காணிக்க முடியும்.

வயர்லெஸ் சென்சார் கருவி
வயர்லெஸ் சென்சார் கருவி

நோயாளிகளின் இதய பகுதியில் ஸ்டிக்கர் போன்ற அமைப்பில் உள்ள இந்த சென்சாரை ஒட்டினால் போதும். ஆறு நாள்களுக்கு அவர்களது அருகில் செல்லாமலேயே அவர்களை முழுமையாக கண்காணிக்க முடியும். கருவியின் சென்சார் சிக்னல் மூலம் நர்சிங் ஸ்டேஷனில் உள்ள பெரிய திரையில் ஒவ்வொரு நோயாளிகளின் இதய இயக்கத்தினைக் கண்காணிக்கலாம்.

24 மணி நேரமும் நோயாளிகளின், சுவாசம், இதயத் துடிப்பு, ஆக்சிஜன் அளவு, உடல் வெப்பநிலை உள்ளிட்ட ஆறு அம்சங்களை கண்காணிக்க முடியும். நோயாளிகளுக்கு உடலில் ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால் உடனே திரையில் அதற்கான அறிவிப்பு வரும். அதன் மூலம் அவர்களை விரைவாக அணுகி மேல் சிகிச்சைகயை அளிக்க முடியும்.

நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்

இந்தியாவில் முதன்முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பயன்பாட்டிற்கு வந்துள்ள இந்த கருவி, மருத்துவ உலகிற்கு ஒரு தொழில்நுட்ப வரப்பிரசாதமாக அமையும் என மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்ற மாற்றுத் திறனாளி - கடும் முயற்சிக்கு குவியும் பாராட்டுகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.