ETV Bharat / state

உயிரிழந்த விவசாயி முத்துவின் மனைவி நீதிமன்றத்தில் முறையீடு! - முத்துவின் மனைவி பாலம்மாள்

மதுரை : விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த தென்காசி விவசாயி முத்துவின் உடலை தடயவியல் மருத்துவர்கள் ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கை விசாரிக்க கோரி மதுரைக் கிளை நீதிமன்ற பதிவாளரிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்த விவசாயி முத்துவின் மனைவி நீதிமன்றத்திடம் முறையீடு !

author img

By

Published : Jul 26, 2020, 6:46 AM IST

தென்காசி மாவட்டம் வாகைக்குளம் கிராமத்தில் வசித்தவர் அணைக்கரை முத்து. மலையடிவாரத்தை ஒட்டி இவருக்குச் சொந்தமான காய்கறித் தோட்டத்தில் அனுமதியின்றி மின் வேலி அமைத்து இருந்ததாகக் கூறி, அவரை கடந்த 22ஆம் தேதி நள்ளிரவில் விசாரணைக்காக சிவசைலம் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாக அறிய முடிகிறது.

இவ்வாறு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அணைக்கரை முத்து, அலுவலர்களால் தாக்கப்பட்டதாக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. இதனால் உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவர் தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுச் செல்லப்பட்டு, அங்கிருந்து கூடுதல் மருத்துவ உதவிக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வனத்துறையினர் விசாரணையின்போது தாக்கியதால்தான் விவசாயி அணைக்கரை முத்து உயிரிழந்ததாகக் கூறி அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கடையம் வாகைக்குளம் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இது தொடர்பாக அவரது மனைவி பாலம்மாள் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளரிடம் முறையீடு வைக்கப்பட்டுள்ளது.

அதில், "விசாரணைக்காக அழைத்துச் சென்ற கணவர் தாக்கப்பட்டதன் காரணமாகவே உயிரிழந்தார். ஆகவே, கணவரின் உடலை தடயவியல் மருத்துவர்கள் குழு உடற்கூறாய்வு செய்யவும், தொடர்புடைய அலுவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவும், வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றவும், உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என முறையிட்டுள்ளார்.

விவசாயி அணைக்கரை முத்து மரணம் குறித்து உயர் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்றும் அனைத்து அரசியல் கட்சியினரும், பொதுநல அமைப்பினரும் கடந்த மூன்று நாள்களாகக் குரல் எழுப்பி வருவது கவனிக்கத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.