ETV Bharat / state

'கருவறையில் தீண்டாமை... பிராமணரல்லாத கோயில் அர்ச்சகர்களுக்கு விடிவு எப்போது?' - கோயில் அர்ச்சகர்

மதுரை: தமிழ்நாட்டில் பிராமணரல்லாத முதல் அர்ச்சகர் மாரிச்சாமியின் படத்தினை விளம்பரத்திற்காகப் பயன்படுத்தும் அரசியல் கட்சியினரே அர்ச்சகர் பயிற்சி படித்து முடித்து வேலை கிடைக்காமல் காத்திருக்கும் பிராமணரல்லாத 203 மாணவர்களுக்கு விடிவு எப்போது கிடைக்கும் என தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் வா. ரங்கநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிராமணரல்லாத கோயில் அர்ச்சகர்களுக்கு விடிவு எப்போது ?

author img

By

Published : Jan 11, 2021, 2:00 PM IST

அர்ச்சகர் பயிற்சி முடித்த பிராமணரல்லாத மாணவர்களின் கோரிக்கை எப்போது நிறைவேறும் என அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கத்தின் தலைவர் வா. ரங்கநாதன் வேதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று (ஜன.10) அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, "தமிழ்நாட்டில் உள்ள கோயில் ஊழியர்களுக்குப் பொங்கலை முன்னிட்டு 1000 ரூபாய் ஊக்கத் தொகையாக தமிழ்நாடு அரசு (ஜன. 07) அன்று அறிவித்தது. இதனை வரவேற்று சமூக ஊடகங்களில் அதிமுகவினர் எடப்பாடி, ஜெயலலிதா, எம்ஜிஆர் படங்களின் பின்னணியில் போஸ்டர் ஒன்றினை வடிவமைத்து பகிர்ந்துவருகின்றனர்.

தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் வா.ரங்கநாதன்
தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சிபெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் வா. ரங்கநாதன்
அதில் தீபாராதனை காட்டும்விதமாக தலைவர்களின் படங்களுடன் இருப்பவர் மதுரை தல்லாகுளம் ஐயப்பன் கோயில் அர்ச்சகர் மாரிச்சாமி. மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினைச் சேர்ந்த இவர், 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்பட்ட அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான சட்டத்தின் படியிலான (முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டது) அர்ச்சகர் பயிற்சி நிலையத்தில் பயிற்சிபெற்றவர். 2018 பிப்ரவரி 26ஆம் தேதியன்று இந்து சமய அறநிலைத் துறையால் தமிழ்நாட்டின் பிராமணரல்லாத முதல் அர்ச்சராக நிரந்தரப் பணியிடத்தில் நியமிக்கப்பட்டவர்.
சமூக நீதி தமிழகத்தில்
சமூக நீதி காத்த தமிழ்நாட்டில்

பிராமணரல்லாத கோயில் அர்ச்சகர்களுக்கு விடிவு எப்போது ?

இதனைத் தங்களது சாதனையாக ஆட்சியாளர்களால் அன்று ஏன் கொண்டாடவில்லை என்பது அவர்களுக்கே வெளிச்சம். இதுபோன்று தப்பித் தவறி நிகழ்பவைகூட இனி நடக்கக் கூடாது என்பதற்காகத்தான் கோயில்களை இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து தங்களைப் போன்ற 'பக்தர்களிடம்' ஒப்படைக்க வேண்டுமென ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து முன்னணி, ஜக்கி வாசுதேவ் போன்றோர் கூக்குரல் விடுக்கின்றனர்.

பிராமணரல்லாத கோயில் அர்ச்சகர்களுக்கு விடிவு எப்போது?
மாரிச்சாமியைப் போன்று அரசால் பயிற்சி அளிக்கப்பட்ட பிராமணர் அல்லாத 203 அர்ச்சக மாணவர்கள் 13 ஆண்டுகளாக அர்ச்சகர் பணியிடங்களில் நிரப்பப்படாமல் காத்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள 36,000 கோயில்களில் அர்ச்சகர் பணியிடங்கள் பல நிரப்பப்படாமல் உள்ளன.
அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் தனி ஒதுக்கீடு கொடுத்து சட்டம் இயற்றி நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. தமிழ்வழி கல்வியில் பயின்றோருக்கு அரசுப் பணியிட தேர்வில் தனி ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
கருவறையில் தீண்டாமை

ஆனால் 'சமூக நீதி தமிழ்நாட்டில்' பிராமணரல்லாத அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்கள் மட்டும் ஆண்டுக்கணக்கில் கேட்பாரின்றி புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அர்ச்சகராகி நாங்கள் கருவறைக்குள் நுழைவது கடவுளுக்கு பூசை செய்யும் எங்களது ஏக்கத்தினை மட்டும் நிறைவேற்றப் போவதில்லை; கருவறையில் நிலவும் தீண்டாமையை அகற்றும் அரும்பணியின் அங்கமாகவும் அமைந்திடப்போகிறது.

போஸ்டர்
பொங்கல் போனஸும் அர்ச்சகர் மாரிச்சாமியும்
இது சட்டப்பேரவைத் தேர்தல் காலக்கட்டம். அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கைகளைத் தயாரித்துவரும் நேரம். தமிழ்நாட்டில் உள்ள பாடல் பெற்ற கோயில்களில், பெரிய கோயில்களில் உள்ள அர்ச்சகர் பணியிடங்களில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற பிராமணரல்லாத அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.
அர்ச்சகர் மாரிச்சாமியின் படத்தினைத் தங்களது விளம்பரத்திற்குப் பயன்படுத்தும் அரசியல் கட்சியினர் இதற்கெல்லாம் செவிமெடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இறப்பு என்னைத் தழுவும் வரை அது அன்று... ஆனால் இன்று அரசியல் ரீ என்ட்ரி 2.0!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.