மதுரையில் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது, "பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய ஆட்சி 100 நாளில் சாதித்தது என்ன? மோடி அரசு பெரும்பான்மையைப் பயன்படுத்தி அரசியல் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துகிறது. பெரியார் போராடிதான் இடஒதுக்கீடு பெற்றுத் தந்தார். இதற்கு அடுத்ததாக கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் 69சதவீதம் இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தனர்.
அதனடிப்படையில் இடஒதுக்கீடு தற்போது நடைமுறையில் உள்ளது. மேலும் மொழிவாரியான மாநிலங்கள் தனியாக செயல்பட அனுமதிக்கலாம் என்று நேரு கூறியதைப்போல், தற்போது மத்திய அரசு ஒரே மொழி கொள்கையைக் கடைபிடித்தால் மொழிவாரியாக தமிழ்நாடு தனி நாடாக செயல்படலாம்" என்றார்.
இதையும் படிங்க: Criticism against GST: ஜிஎஸ்டி வரி சட்டம்தான் தொழில்களை முடக்குகிறது - ஜி. ராமகிருஷ்ணன்