மதுரை ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த ஜெயவெங்கடேஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில்," நான் சித்த மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். தமிழ்நாடு அரசு 1970 பிப்ரவரி 10ஆம் தேதி பிறப்பித்த அரசாணைப்படி கோயில்களில் சித்த மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும்.
தமிழ்நாடு கோயில்களில் எத்தனை சித்த மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்? என்பது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கோரியபோது, 6 சித்த மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றி வருவது தெரியவந்தது. இதுதொடர்பாக நடவடிக்கை கோரி அரசு அலுவலர்களிடம் மனு அனுப்பியும் எந்த பதிலும் இல்லை. ஆகவே தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் சித்த மருத்துவமனையை அமைக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் திருப்பதி கோயிலில் சித்த மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, மருத்துவக் கல்லூரியும் உள்ளது என தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள் சித்த மருத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வையும், நமிக்கையையும் ஏற்படுத்த சித்த மருத்துவர்கள் தரப்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பினர்.
அரசுத்தரப்பில் 6 கோயில்களில் மருந்தகங்கள் உள்ளன. முக்கிய கோயில்களில் சித்த மருத்துவமனைகளை அமைக்க திட்டமுள்ளது என தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள்," 6 கோயில்களிலும் சித்த மருந்தகங்கள் எப்போது தொடங்கப்பட்டன?
அவை இயங்கும் நேரம் என்ன?
தமிழ்நாட்டில் உள்ள மற்ற கோயில்களில் சித்த மருந்தகங்களைத் தொடங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பி இது குறித்து சுகாதாரத்துறை செயலர், இந்து சமய அறநிலையத்துறை இயக்குநர் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
கோயில்களில் சித்த மருந்தகங்களைத் தொடங்க என்ன நடவடிக்கை: சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு - கோவில்களில் சித்த மருத்துவமனை அமைக்க நடவடிக்கை
மதுரை: தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் சித்த மருந்தகங்களைத் தொடங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.