மதுரை வழியாக கன்னியாகுமரி-ஹவுரா ரயில் நிலையங்களுக்கு இடையே வாராந்திர சிறப்பு விரைவு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
- வண்டி எண்- 02666, கன்னியாகுமரி-ஹவுரா வாராந்திர சிறப்பு விரைவு ரயில், ஏப்ரல் 3ஆம் தேதி முதல் சனிக்கிழமைகளில் கன்னியாகுமரியிலிருந்து அதிகாலை 05.30 மணியளவில் புறப்பட்டு மறுநாள் இரவு 11.55 மணிக்கு ஹவுராவுக்கு செல்கிறது.
- அதே போல, வண்டி எண்- 02665, ஹவுரா- கன்னியாகுமரி வாராந்திர விரைவு சிறப்பு ரயில், ஏப்ரல் 5ஆம் தேதி முதல் திங்கட்கிழமைகளில் ஹவுராவிலிருந்து மாலை 04:15 மணிக்கு புறப்பட்டு புதன்கிழமை காலை 10:50 மணிக்கு கன்னியாகுமரி வந்து சேருகிறது.
இந்த சிறப்பு ரயிலானது, நாகர்கோவில், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம் விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை, எழும்பூர், நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி, விசாகப்பட்டினம் பெர்ஹாம்பூர், குர்தா ரோடு, புவனேஸ்வர், கட்டாக், பட்ராக், பாலாசூர், கரக்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. மேலும், இந்த ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு அவசியம் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 'கை' இறங்கிய கதை