மதுரை: கரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு தீவிரமாக உள்ள சூழ்நிலையில், தமிழ்நாடு அரசு தளர்வுகள் அற்ற ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனைக் கருத்தில்கொண்டு மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் அருண்குமார், ஹெரிடேஜ் பவுண்டேஷன் நாகராஜ் ஆகியோர் இப்பகுதியில் உள்ள 3,500 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் வழங்க முடிவெடுத்தனர்.
அதன்படி இன்று தமிழ்நாடு அரசின் கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து மக்களை கூட்டமாக சேர விடாமல் ஆரப்பாளையம் பகுதியில் ஒவ்வொரு தெருவாக மக்களின் இருப்பிடத்திற்கே சென்று ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி மற்றும் காய்கறி தொகுப்புகளை அவர்கள் வழங்கினர்.
அதே போன்று அப்பகுதியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கும் அவர்கள் நிவாரண தொகுப்புகளை வழங்கினர். தன்னார்வலர்களின் இந்த முயற்சியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
இதையும் படிங்க: ரேஷன் பொருட்களை வீடுகளில் நேரடியாக விநியோகம் செய்ய கோரிக்கை