தஞ்சாவூரைச் சேர்ந்த பேராசிரியர் ரவீந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தராக பாலசுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் நியமன விதிமுறைகளை மீறி நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு உரிய தகுதி இல்லை. அதனால், பாலசுப்பிரமணியன் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை முன்னதாக விசாரணை செய்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி வேலுமணி வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் நியமனத்தை ரத்து செய்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இதையும் படிங்க...அயன் பட பாணியில் கடத்தப்பட்ட போதைப்பொருள்: வெளிநாட்டவர் ஒருவர் கைது!