மதுரையில் நேற்று(பிப்.18 ) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற அரசியல் எழுச்சி மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக தலைவர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
அரசியலில் அரஜாகம் செய்யும் பாஜக:
மாநாட்டில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது, "திமுக கூட்டணியை வெற்றியோடு முன்னெடுத்து செல்ல வேண்டிய பொறுப்பு அனைத்து கட்சிகளுக்கும் உண்டு. கூட்டணியை சிதறடிக்க கங்கனம்கட்டிகொண்டு சனாதன அதிமுக, பாஜகவினர் சதி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றைய அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை தோலுரித்துக் காட்ட வேண்டும், வரும் தேர்தலில் அடிக்கிற அடியில் சனாதன கட்சி தமிழ்நாட்டின் பக்கமே தலைவைத்து கூட படுக்கக்கூடாது. பாஜகவின் செயல்திட்டங்களை தீர்மானிப்பது ஆர்.எஸ்.எஸ். அனைத்து மாநிலங்களில் பாஜக ஆள வேண்டும் என்பது அவர்களது கனவு.
உலக மகா நடிகர் மோடி:
சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் கட்சிகளைப் பிரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கி ஆட்சியமைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது என, பாஜகவினர் எந்தவித அராஜகத்தையும் நிகழ்த்துவார்கள். அயோத்தி பற்றி பேசினால் எடுபடாது என்பதால் அறுபடை முருகனை வைத்து அரசியல் செய்கின்றனர்.
உலக மகா நடிகரான மோடி, வள்ளுவரையும், ஔவையாரையும் பற்றி பேசுவது தமிழ் இனத்தை ஏமாற்றும் மோசடியாகும். இந்தியா விற்பனைக்கு என்றும் மட்டும் தான் எழுதவில்லை என்ற அவலம் தற்போது ஏற்பட்டுள்ளது. ரத்தம் கக்கும் கும்பலிடம் இந்த ஆட்சி சிக்கிக்கொண்டுள்ளது.
அதிமுக, பாஜகவிற்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது. ஆனால் தேர்தலுக்கு முன்பு அதிமுகவை பாஜக நிச்சயம் அழித்து விடும். அதிமுகவில் ஜெயலலிதா இல்லாத நிலையில் ஒன்றிய செயலாளரும் கோடீஸ்வரனாக உள்ளதால் அச்சத்தில் பாஜகவிடம் அடிமையாகியுள்ளனர்.
மோடியா? லேடியா? - ஜெயலலிதா கேட்டது போல எடப்பாடியால் கேட்க முடியுமா?
திமுக தலைமையில், ஆட்சி உருவானால் திமுகவிற்கு எதிராக அதிமுக அல்ல பாஜக தான் என்ற நிலை உருவாக வேண்டும் என்பது தான் பாஜகவின் எண்ணம். நிச்சயம் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆல் அதிமுகவைக் காப்பாற்ற இயலாது. மோடியா? லேடியா? என்ற ஜெயலலிதா கேட்டதை போல எடப்பாடியால் கேட்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: பயண களைப்பு: வண்டியை நிறுத்தி ரோட்டோரக் கடைக்குச் சென்று டீ குடித்த எடப்பாடி!