விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் இந்து கோயில்களில் உள்ள சிலைகள் குறித்து பேசியது சர்ச்சையைக் கிளப்பியது.
இதனைத்தொடர்ந்து நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் திருமாவளவனை விமர்சித்திருந்தார். கயாத்ரி ரகுராமின் ட்விட்டர் பதிவினைக் கண்டித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பெண்கள் அமைப்பினர் காயத்ரி ரகுராம் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் இன்று மதுரை காவல் ஆணையரிடம் திராவிட விடுதலைக் கழகம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக காயத்ரி ரகுராம் மீது புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் மா.பா. மணி அமுதன்," தொல். திருமாவளவன் கூறிய கருத்து சரியான கருத்து என்பதை நாங்கள் உணர்கிறோம்.
ஆனால், காயத்ரி ரகுராம் திருமாவளவனை செருப்பால் அடிப்போம் என்று கூறி இழிவுபடுத்துவது, அவரது பாசிச தன்மையைக் காட்டுகின்றது. இதுபோன்ற வார்த்தைகளை பேசி வரும் காயத்ரி ரகுராம் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து அவரைக் கைது செய்ய வேண்டும் என்று புகார் மனு அளித்துள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: ஈரோடு - புளியம்கோம்பை பகுதியில் அணை கட்ட மக்கள் கோரிக்கை!