ETV Bharat / state

'மனிதனை கடவுள் காப்பாற்றிய காலம்போய் கடவுளை மனிதன் காப்பாற்றுகிறான்!' - வைரமுத்து பாடல்கள்

மதுரை: மனிதனை கடவுள் காப்பாற்றிய காலம்போய், இப்போது கடவுளை மனிதன் காப்பாற்றிக் கொண்டிருக்கிறான் என்று கவிஞர் வைரமுத்து பேசியுள்ளார்.

vairamuthu
author img

By

Published : Aug 11, 2019, 11:27 AM IST

மதுரை மருத்துவக்கல்லூரி வளாக அரங்கத்தில் கவிஞர் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை நூல் அறிமுக விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், கவிப்பேரரசு வைரமுத்து, கம்பம் செல்வேந்திரன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் திருமலை ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

அப்போது வைரமுத்து பேசுகையில், 'உங்களால் எழுதுகிறேன்; உங்களுக்காக எழுகிறேன்' இன்றைய சமுதாயத்திற்கு மட்டுமல்ல நாளைய சமுதாயத்திற்கும் சேர்த்தே எழுதுகிறேன் என்றார்.

கருணாநிதி இல்லாத நேரத்தில்...

  • தன் தமிழ் எழுத்தை யார் போற்றுவார்கள்?
  • யார் தன் எழுத்தை கவுரவிப்பார்கள்?
  • யார் தன் தமிழ் எழுத்தை சுட்டிக்காட்டுவார்கள்?
  • யார் தன் எழுத்தை வாசித்து பெருமைப்படுத்துவார்கள்?

என்று துயில் கொள்ளாமல் இருந்ததாக, தனது எழுத்தின் மீதான கருணாநிதியின் காதலை வைரமுத்து கேள்விகளால் வெளிப்படுத்தினார்.

மதுரையில் இத்தனை கலைஞர்கள் தமிழாற்றுப்படையை வரவேற்று பேசும்போதும், கைதட்டி உற்சாகப்படுத்தும்போதும் தமிழ் கலைஞர்கள் வடிவில் கருணாநிதி இருப்பதை உணர்வதாக அவர் சிலாகித்துப் பேசினார்.

தமிழாற்றுப்படை பரிசு பெறுமா, பொன்னாடை வருமா, பிரதிகள் தாண்டுமா, விருது பெறுமா என்று நினைத்து எழுதவில்லை எனக் குறிப்பிட்ட வைரமுத்து, எந்த நாடாளுமன்றத்தை விட இந்த நாடாளுமன்றத்தில்தான் தமிழ் மீதும், தமிழ் மண்மீதும் பாசம் கொண்டவர்களை அதிகமாக அனுப்பியுள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்தார். மசோதா கூட தோற்கலாம்; இந்த மண்ணின் மணம் தோற்காது என்றார்.

'தமிழ் தமிழ்' என்று ஏன் பேசுகிறீர்கள் என்று சிலர் அறியாமையில் கேட்பதாக சொன்ன வைரமுத்து, அறம் சார்ந்த வாழ்க்கைக்கு தமிழ் அவசியம் என்பதை எடுத்துரைத்தார். அறம் எங்கு உள்ளதோ அங்கு தமிழ் இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

மனிதனை கடவுள் காப்பாற்றிய காலம்போய், கடவுளை மனிதன் காப்பாற்றியுள்ளான்; கவிஞன் காப்பாற்றியுள்ளான் என்று பேசி அரங்கை அதிரவைத்தார்.

கவிஞர் வைரமுத்து பேச்சு

கம்பன் ராமனை ராமாயணத்தில் காப்பாற்றியுள்ளதாக கூறிய அவர், அதற்கு ஆதாரம் தான் வைத்துள்ளதாகவும் அதிரடியாக தெரிவித்தார். அதை எழுதுவதற்கு தான் மிகுந்த சிரமப்பட்டதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

Intro:கடவுளை மனிதன் காப்பாற்றுகிறான் - கவிஞர் வைரமுத்து பேச்சு

மனிதனை கடவுள் காப்பாற்றிய காலம் போய் இப்போது கடவுளை மனிதன் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறான் என்று கவிஞர் வைரமுத்து பேசினார்Body:கடவுளை மனிதன் காப்பாற்றுகிறான் - கவிஞர் வைரமுத்து பேச்சு

மனிதனை கடவுள் காப்பாற்றிய காலம் போய் இப்போது கடவுளை மனிதன் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறான் என்று கவிஞர் வைரமுத்து பேசினார்

மதுரை மருத்துவக்கல்லூரி வளாக அரங்கத்தில் கவிஞர் வைரமுத்து அவர்களின் தமிழாற்றுப்படை நூல் அறிமுக விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், கவிப்பேரரசு வைரமுத்து, கம்பம் செல்வேந்திரன், தஞ்சை தமிழ்ப்பல்கலை கழக முன்னாள் துணை வேந்தர் திருமலை ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

தமிழாற்றுப்படை நூல் அறிமுக விழாவில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பேச்சு.

தமிழ் உரைநடையில் ஆகச்சிறந்த புத்தகம் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை.

நாடாளுமன்றத்தில் எந்த மசோதா தாக்கல் செய்தாலும் அந்த மசோதாவை தாக்கல் செய்த மந்திரி ராமாயணத்திலிருந்தே, மகாபாரதத்திலிருந்தே தான் பேச ஆரம்பிப்பார்கள்.

நாடாளுமன்றத்தில் விளையாட்டாக இருந்தாலும் எந்த விஷயமாக இருந்தாலும் புராணங்களை,  இதிகாசங்களை மேற்கோள் காட்டி தான் பேசுவார்கள். அதுபோலத்தான் வடக்கிலே புராணத்தை வைத்தே ஆரம்பிப்பார்கள்.

ஆனால் தமிழை முன்னிறுத்தி இலக்கியத்தை கையில் எடுத்து உரைநடையில் தொடங்குபவர்கள் தமிழர்கள்.

நான்கு நாட்களுக்கு முன்பு கீழடியில் பழம் பெருமை வாய்ந்த இரும்பு பொருட்கள் கிடைத்தது. அதே போல தமிழாற்றுப்படையை படிக்கும் போது அதே இரும்பு கிடைக்கிறது.

ராமனை காப்பாற்றினால் இந்து மதத்தை காப்பாற்றலாம். இந்து மத்தை காப்பாற்றினால் இராமனை காப்பாற்றலாம் என வடக்கில் குரல் ஒலித்தது.

தெற்கில் கம்பனை காப்பாற்றினால் தமிழை காப்பாற்றலாம். தமிழை காப்பாற்றினால் கம்பனை காப்பாற்றலாம் என்று குரல் ஒலிக்கிறது.

பாட வந்த பேச வந்த எல்லோரும் எங்கள் தமிழ் என்று சொன்னார்கள்.

இந்த மண்ணில் ஆழ பதிந்தது எங்கள் தமிழ்.

யாராலும் அடக்க முடியாதது எங்கள் தமிழ்.

வள்ளுவனை தூக்கி கொண்டாடுவது, அவனை மார்பில் வைத்து போற்றுவது, சாகும் போது வள்ளுவத்தை நெஞ்சில் வைத்து புதைக்க வேண்டும் என்று அறிஞர்களை சொல்ல வைத்தது திருக்குறளின் திருவள்ளுவரின் வலிமையை காட்டுகிறது.

மனித மேலாண்மை மட்டுமல்லாமல், 

மனித மனதை எப்படி மேலாண்மை செய்ய வேண்டும் என்ற அறத்தோடு, நெறியோடு இருக்க வேண்டும் என பேச வைத்த ஒரே நூல் திருக்குறள்.

வள்ளுவன் எழுதிய திருக்குறள் எல்லா மக்களுக்கும் காவியம் போன்றது. 

மனுதர்ம ஏடுகளை தேடியபோது 1000 மட்டுமே கிடைத்தது. அர்த்த சாஸ்திரத்தை தேடியபோது 25 மட்டுமே கிடைத்தது. ஆனால் வள்ளுவம் அனைத்து புலவவர்கள் கையில் இருந்தது என்று சொன்னால் அது தான் வள்ளுவத்தின் வலிமை.

1100 குறியீடுகள் கீழடியில் கிடைத்துள்ளது. அவை சிந்துசமவெளி நாகரீகத்தோடு ஒத்துப்போகிறது.

சிசேரியன், மருத்துவம், வாழ்க்கைமுறை, பக்தி, கலை, கட்டடிடக்கலை எல்லாமே எங்கள் புராணங்களிலும் இதிகாசங்களிலும் இருக்கிறது என்று அவர்கள் சொல்வார்கள். நாம் அப்படி சொல்ல வேண்டியதில்லை.

மரபு வேறு, பழமை வேறு.

மரபு மக்காது. புதிய புதிய தலைமுறைக்கு அது கடத்திச்செல்லும்.

பழமை மக்கும், சீழ்பிடிக்கும். மரபை கொண்டாடுவோம். பழமையை தூக்கி எறிவோம் என்று பேசினார்.

அவரையடுத்து பேசிய கவிஞர் வைரமுத்து,

உங்களால் எழுதுகிறேன். உங்களுக்காக எழுகிறேன். இன்றைய சமுதாயத்திற்கு மட்டுமல்ல நாளைய சமுதாயத்திற்கும் சேர்த்தே எழுதுகிறேன்.

கருணாநிதி இல்லாத நேரத்தில் என் தமிழ் எழுத்தை யார் போற்றுவார்கள், யார் என் எழுத்தை கெளரவிப்பார்கள், யார் என் தமிழ் எழுத்தை சுட்டிக்காட்டுவார்கள், யார் என் எழுத்தை வாசித்து பெருமைப் படுத்துவார்கள் என்று துயில் கொள்ளாமல் இருந்தேன்.

ஆனால் மதுரையில் இத்தனை கலைஞர்கள் தமிழாற்றுப்படையை வரவேற்று பேசும் போதும், கைதட்டி உற்சாகப்படுத்தும் போதும் தமிழ்கலைஞர்கள் வடிவில் கருணாநிதி இருப்பதாக உணர்கிறேன்.

தொல்காப்பியர் எழுதிய தமிழுக்கு 3000 ஆண்டுகள் வரலாறு உண்டு.

உடுத்தல் என்பது மரபு.எதை உடுத்ததுதல் என்பது பழமை. மாறாதது மரபு. மாறிக்கொண்டு இருப்பது பழமை.

தமிழாற்றுப்படை பரிசு பெறுமா, பொன்னாடை வருமா, பிரதிகள் தாண்டுமா, விருது பெறுமா என்று நினைத்து எழுதவில்லை.

மக்கள் தமிழாற்றுப்படையை புரிந்துகொள்ளவே விரும்பினேன்.

சிறிது நாட்களுக்கு முன்பு விமானநிலையம் குறித்து சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார். 

அதில் விமான நிலையத்தில் எவ்வளவு பேர் பயணிக்கிறார்கள், எத்தனை விமானம் செல்கிறது, எண்ணிக்கை என்ன, பயணிப்பவர்கள் யார், எத்தனை பேர் எனக் கேட்டு வாராணாசியை விட மதுரைக்கு தான் சர்வதேச விமான அந்தஸ்து தேவை என தன் சொந்த மண்மீது பாசம் கொண்டு கோரிக்கை வைத்தார் சு.வெங்கடேசன்.

மண்ணின் மீது பாசம் உள்ள ஒருவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி உள்ளோம்.

எந்த நாடாளுமன்றத்தை விட இந்த நாடாளுமன்றத்தில் தான் தமிழும், தமிழ் மண் மீது பாசம் கொண்டவர்களை அதிகமாக அனுப்பியுள்ளோம்.

இவர்களை ஏமாற்ற முடியாது. இவர்களை தாண்டி ஒரு சித்தாந்த்தை நிறைவேற்ற முடியாது. மசோதா கூட தோற்கலாம். இந்த மண்ணின் மணம் தோற்காது. 

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உயர்த்திப் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

மண்ணின் மீது பாசம் உள்ள ஒருவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி உள்ளோம்.

தமிழ் தமிழ் என்று ஏன் பேசுகிறீர்கள் என்று சிலர் அறியாமையில் கேட்கின்றனர்.

அறம் சார்ந்த வாழ்க்கைக்கு தமிழ் அவசியம். அறம் எங்கு உள்ளதோ அங்கு தமிழ் இருக்கும்.

மனிதனை கடவுள் காப்பாற்றிய காலம் போய், கடவுளை மனிதன் காப்பாற்றியுள்ளான்.

கவிஞன் கடவுளை காப்பாற்றியுள்ளான். கம்பன் இராமனை இராமாயணத்தில் காப்பாற்றியுள்ளான். 

அதற்கு ஆதாரம் நான் வைத்துள்ளேன். அதை எழுதுவதற்கு நான் மிகுந்த சிரமப்பட்டேன் என்று பேசினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.