மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் கதிரேசன். வழக்கறிஞரான இவர் மதிமுகவில் கடந்த 27 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறார். மதிமுக மதுரை தெற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பில் இருந்து வந்தார். இவர் கடந்த சில நாள்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று (மார்ச் 23) திடீரென்று இயற்கை எய்தினார்.
அவரது துயரச் செய்தி கேட்டு வருத்தமடைந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (மார்ச் 24) காலை கலிங்கப்பட்டியில் இருந்து புறப்பட்டு அவனியாபுரத்தில் உள்ள கதிரேசன் வீட்டிற்குச் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவருடைய மனைவி, மகன்கள் உள்பட குடும்பத்தினருக்கு கண்ணீர் மல்க ஆறுதல் கூறினார்.
இதையும் படிங்க: 'யாரும் விரல் நீட்டி நான் தவறு செய்தேன் என்று சொல்ல முடியுமா?' - வைகோ சவால்