மதுரை: பழனியில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (12.6.2022) அன்று வைகாசி விசாகத் திருவிழா நடைபெற இருக்கிறது. எனவே, பயணிகள் வசதிக்காக மதுரை - பழனி ரயில் நிலையங்களுக்கு இடையே சிறப்பு ரயில் ஒன்று இயக்க ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி மதுரை - பழனி முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயில் மதுரையிலிருந்து காலை 10.50 மணிக்கு புறப்பட்டு மதியம் 01.25 மணிக்கு பழனி சென்று சேர்ந்துவிடும்.
மறுமார்க்கத்தில் பழனி - மதுரை முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயில் பழனியில் இருந்து மதியம் 02.45 மணிக்கு புறப்பட்டு மாலை 05.10 மணிக்கு மதுரை வந்து சேர்ந்துவிடும். இந்த சிறப்பு ரயில்கள் சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களில் 10 இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு பொது மற்றும் சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும். முன்னதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் திருச்செந்தூர் மற்றும் பழனிக்கு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம் கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருக்கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்