ETV Bharat / state

சிறப்பு பள்ளிகளில் காலிப் பணியிடங்கள்: மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மற்றும் நலத்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு

மதுரை: மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப கோரிய வழக்கில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மற்றும் நலத்துறை செயலாளர் பதிலளிக்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை கிளை
மதுரை கிளை
author img

By

Published : Sep 22, 2020, 3:28 PM IST

மதுரை பசும்பொன் நகரைச் சேர்ந்த வெங்கட்ராமன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், தமிழ்நாட்டில், காது கேளாதோர் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக அரசு உதவி பெறும் பள்ளிகள் 76 உள்ளது. இதில் அரசு பள்ளிகள் 22 உள்ளன. இதில் கண் பார்வையற்றோருக்கான 10 சிறப்பு பள்ளிகளும், காது கேளாதவர்களுக்கான 10 சிறப்பு பள்ளிகளும் அடக்கம். இதில் 5 மேல் நிலைப் பள்ளிகளும் உள்ளன.

இந்த பள்ளிகளில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவிற்கென, அரசு 450 முதல் 650 ரூபாய்வரை வழங்கி வருகிறது.

இதில் பூந்தமல்லி, தஞ்சாவூர் பள்ளிகளில் பயின்று வரும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே போல திருச்சியில் உள்ள சிறப்பு பள்ளியில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்களும் 100 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.

ஆனால் அரசால் நடத்தப்பட்டு வரும் பள்ளிகளில் ஏராளமான காலிப் பணியிடங்கள் உள்ளன. குறிப்பாக இடைநிலை ஆசிரியர்கள், மற்றும் மேல்நிலை ஆசிரியர்கள், கம்ப்யூட்டர் பயிற்றுநர்கள், இசை ஆசிரியர், வாட்ச்மேன், தூய்மைப் பணியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

இதனால், இந்த சிறப்பு பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், இந்த காலிப் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும்.

இந்த மனு நீதிபதிகள், சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மற்றும் நலத்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.