ETV Bharat / state

'அரசியல்வாதிகள் என்னைப் போல் இருக்க வேண்டும் '- கமல்ஹாசன் - kamal haasan

மதுரை: இனிவரும் அரசியல்வாதிகள் என்னைப் போல் இருக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

upcoming-politicians-should-like-me-says-makkal-needhi-maiam-kamal-haasan
கமல்ஹாசன்
author img

By

Published : Jan 11, 2020, 11:02 PM IST

Updated : Jan 11, 2020, 11:53 PM IST

மதுரை சிந்தாமணி பகுதியில் வேலம்மாள் ஐடா வளாகத்தில் இளம் தொழில் முனைவோருக்கான மாநாடு (YESCON-2020) நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், "ரௌத்திரம் பழகு என்பது போல அரசியலும் பழக வேண்டும். மக்கள் நீதி மய்யத்தில் சூட்டும் கோட்டும் போட்டுகொண்டு தொழில்முனைவோர்கள் வரலாம். தமிழ்நாடு முதலிடம் என அரசரின் ஆடை போல கூறுகிறார்கள். எல்லா விருதுகளையும் வாங்கிக்கொண்டு தமிழ்நாடு முதலிடம் முதலிடம் என்று சொல்கிறார்கள். ஆனால் அவரின் அம்மணம் தெரியவில்லை. வரும் விருதுகளைப் பெற்றுக்கொண்டு தமிழ்நாடு முன்னேறுவதாக அரசு நினைக்கலாம், ஆனால் நாம் நினைக்ககூடாது.

விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டிய உபகரணங்களைக் கண்டுபிடிக்க வேண்டிய வேலையும் அதற்கான வாய்ப்பும் நம்மிடம் உள்ளது. மக்கள் நீதி மய்யம் அதைச் செய்யும். தங்கம், வைரம் ஆகியவை கிடைத்தாலும் தரையில் விவசாயத்தை அழிக்கக்கூடாது.

தங்க பிஸ்கெட்டிற்கும், சாப்பிடும் பிஸ்கெட்டிற்கும் ஒரே மாதிரியான ஜிஎஸ்டி வரி உள்ளது. சினிமாத்துறையிலும் ஜிஎஸ்டி வரியைக் குறைப்பதற்கு ஆலோசனை வழங்கியுள்ளேன். கல்வியைத் தனியாருக்கு கொடுத்துவிட்டு, மதுவை அரசு எடுத்து நடத்தும் அவலம் நிலவுகிறது. தெருவில் உள்ள பிரச்னைகள் முன்னின்று தீர்வு காண வேண்டும் அதுவே தீர்வு. பெரிய ஊழலை தடுக்க வந்திருக்கும் எங்களுக்கு பெரிய உதவி தேவை.

இன்னும் ஐம்பது வாரங்களில் உங்களின் சக்தியைக் காட்டுவதற்கான நேரம் வருகிறது. அடுத்த தலைமுறையின் வெற்றியை கண்டுகொள்ளாமல் தூங்கமாட்டேன். இனிவரும் அரசியல்வாதிகள், என்னைப் போல் இருக்க வேண்டும்.

ஆளும்கட்சியினர் தொழில் முனைவோரின் 30 சதவீத லாபத்தை பறிக்கின்றனர். மக்கள் நீதி மய்யத்திற்கு வாய்ப்பளித்தால் தொழில்முனைவோருக்கான அந்த 30 சதவீதம் லாபம் கிடைக்கும்" எனத் தெரிவித்தார்.

தொழில் முனைவோருக்கான மாநாட்டில் கமல்ஹாசன் பேச்சு

இதையும் படியுங்க: திராவிட அரசியல் சரியான திசையில் செல்லவில்லை: கமல்ஹாசன்

Intro:*நான் அரசியல்வாதி, இனிவரும் அரசியல்வாதிகள், என்னை போல் இருக்க வேண்டும் - கமல்ஹாசன் பேச்சு*Body:
*நான் அரசியல்வாதி, இனிவரும் அரசியல்வாதிகள், என்னை போல் இருக்க வேண்டும் - கமல்ஹாசன் பேச்சு*

மதுரை சிந்தாமணி பகுதியில் வேலம்மாள் ஐடா வளாகத்தில் நடைபெறும் இளம் தொழில் முனைவோருக்கான மாநாட்டில் (YESCON-2020) மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பங்கேற்றார்.

*தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மேடையில் பேசியதாவது;*

அரசியல்வாதி குட்டிக்கதை சொன்னால் அதை கை தட்டி கேட்டு இத்தனை நாள் அமைதியாக இருந்து விட்டோம்.

கேள்வி கேட்க மறந்து விட்டோம்.

தமிழகம் முதலிடம், தமிழகம் முதலிடம் எனக் கூறி, அரசரின் ஆடை போல கூறுகிறார்கள். ஆனால் அவரின் அம்மணம் தெரியவில்லை. எல்லா விருதுகளையும் வாங்கிக்கொண்டு தமிழகம் முதலிடம் முதலிடம் என்று சொல்கிறார்கள்.

விவசயிகளை காப்பாற்ற வேண்டிய உபகரணங்களை கண்டுபிடிக்க வேண்டிய வேலையும், அதற்கான வாய்ப்பும் நம்மிடம் உள்ளது.

மக்கள் நீதி மய்யம் அதைச் செய்யும்.

தமிழகத்தில் கண்டுபிடிப்பு என்பது ஒரு மாற்றம் தான். நான் அரசியல்வாதி தான். இனிவரும் அரசியல்வாதி இனிமேல் என்னை போல் இருக்க வேண்டும்.

தங்க பிஸ்கெட்டிற்கும் சாப்பிடும் பிஸ்கெட்டிற்கும் ஒரு மாதிரியான ஜிஎஸ்டி வரி உள்ளது. சினிமாத்துறையிலும் ஜிஎஸ்டி வரியை குறைப்பதற்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்.

மக்கள் நீதி மய்யத்தில் சூட்டும் கோட்டும் போட்டுகொண்டு தொழில்முனைவோர்கள் வரலாம் மக்கள் நீதி மய்யம் நல்ல கட்சி.

ரௌத்திரம் பழகு என்பது போல அரசியலும் பழக வேண்டும்.

அரசு கல்வியை தனியாருக்கு கொடுத்துவிட்டு மதுவை அரசு எடுத்து நடத்தும் அவலம் நிலவுகிறது.

தெருவில் உள்ள பிரச்சனைகள் முன்னின்று தீர்வு காண வேண்டும் அதுவே தீர்வு.

பெரிய ஊழலை தடுக்க வந்திருக்கும் எங்களுக்கு பெரிய உதவி தேவை.

வரும் விருதுகளை பெற்றுகொண்டு தமிழகம் முன்னேறுவதாக அரசு நினைக்கலாம் நாம் நினைக்ககூடாது

தங்கம் வைரம் கிடைத்தாலும் தரையில் விவசாயத்தை அழிக்ககூடாது.

இன்னும் 50வாரங்களில் உங்களின் சக்தியை காட்டுவதற்கான நேரம் வருகிறது.

அடுத்த தலைமுறையின் வெற்றியை கண்டுகொள்ளாமல் தூங்கமாட்டேன்.

நான் அரசியல்வாதி, இனிவரும் அரசியல்வாதிகள், என்னை போல் இருக்க வேண்டும்.

ஆளும்கட்சியினர் தொழில் முனைவோரின் 30சதவித லாபத்தை பறிக்கின்றனர்.

மக்கள் நீதி மய்யத்திற்கு வாய்ப்பளித்தால் தொழில்முனைவோருக்கான 30சதவிதம் லாபம் கிடைக்கும்.Conclusion:
Last Updated : Jan 11, 2020, 11:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.