மதுரை: மத்திய சுகாதாரத்துறை செயலளர் ராஜேஷ் பூஷன் தமிழ்நாடு தலைமை செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தற்காலிக இடத்தில் நடப்பாண்டில் 50 முதல் 100 மாணவர் சேர்க்கைக்கு தேவையான வசதிகள், வகுப்பறைகள், அலுவலகத்திற்குத் தேவையான இடங்கள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு தேர்வு செய்ய வேண்டும்.
தற்காலிக இடத்தை அரசு தேர்வு செய்து வழங்கினால் செலவுகள், அலுவலர்கள் தேர்வு உள்ளிட்ட அனைத்தையும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஏற்றுக்கொள்ளும். மேலும் உடனடியாக வேலைகளும் தொடங்கப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தற்காலி இடத்தில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு, எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை தொடங்க கோரிய வழக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜூலை 30-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ’இந்தி தெரியாது... தெரிந்த மொழியில் பதில் அளியுங்கள்’ - ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்!