தைத்திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கோலாகலமாக இன்று நடைபெற்றது. மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், பிற மாவட்டங்களிலிருந்தும் மாடுபிடி வீரர்களும், காளைகளும் பங்கேற்றனர்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின் தலைவர் பி.ராஜசேகரன், தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன், அமமுக பொதுச்செயலாளர் தினகரன் ஆகியோரின் காளைகள் இந்தப் போட்டியில் களமிறங்கியுள்ளன.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வளர்க்கும் காளைகளில் நான்குக்கும் மேற்பட்டவை இன்று களமிறங்கின. மூன்று காளைகள் பிடிபடாமல் நழுவிச் சென்றது.
இதையும் படிங்க:
தமிழரும் ஜல்லிக்கட்டும்- வீரம் செறிந்த காதல் கதை!