மதுரை இராசாசி அரசு மருத்துவமனை, பல்நோக்கு சிகிச்சை மைய வளாகத்தில் கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களிலிருந்து வரும், கரோனா பாதிப்பு அறிகுறிகள் கொண்ட நபர்கள், தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதில் கரோனா பாதிப்பிற்குள்ளாகி இதுவரை மொத்தம் 226 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர் உள்பட இருவருக்கு கரோனா தொற்று புதிதாக உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தவிர, இதுவரை 113 பேர் பூரண குணமடைந்து தங்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், இரண்டு பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
வீடு திரும்பியவர்கள் தவிர்த்து, தற்போது மொத்தம் 111 பேர் இம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரையை பொறுத்தவரை, பிற மாநிலங்களிலிருந்து அங்கு வருபவர்கள்தான் தொடர்ந்து கரோனா பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மனநிலையைப் பாதிக்கும் பப்ஜி வேண்டாம்: கோலம் மூலம் பெண் விழிப்புணர்வு