மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகத்தில் வசித்து வந்த கருப்பு பிள்ளை எனும் முதியவர் (84) நேற்று (மே.11) இயற்கை எய்தினார். இவரது இறுதி சடங்கில் கலந்து கொள்ள உறவினர்கள் இன்று (மே.12) வந்திருந்தனர். அப்போது இறுதி சடங்கு நிகழ்ச்சியின் ஒரு பகுதியான நீர் மாலை குடம் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதற்காக சாலை அருகில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் நீர் எடுப்பதற்காக பெண்கள் அனைவரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி திடீரென இறுதி சடங்கு கூட்டத்துக்குள் புகுந்து மூன்று பெண்கள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பொன் மலர் (40), ராணி (40) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த மற்றொரு பெண் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தகவலறிந்து சென்ற காவல் துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சோழவந்தான் காவல் துறையினர், ஓட்டுநரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : 'காலில் விழுந்து கண்ணீர் விட்ட இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர்!'