மதுரை: குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சிஏ படித்து வருகிறார். இந்த நிலையில் மதுரையில் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டம் ஒன்றில் பங்கேற்பதற்காக, டிசம்பர் 16ஆம் தேதி அகமதாபாத்திலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் வந்துள்ளார். இதனையடுத்து அப்பெண், மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கி உள்ளார்.
அப்போது அவர் தங்கியிருந்த அறைக்குப் பக்கத்து அறையில், சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஆஷீஷ் ஜெயின் (22) என்பவர் தங்கி உள்ளார். இவர் அப்பெண்ணுக்கு ஏற்கனவே அறிமுகமானவர் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் டிசம்பர் 17ஆம் தேதி கலந்தாய்வுக் கூட்டத்திற்குச் செல்லும்போது, உடல்நிலை சரியில்லை என ஆஷீஷிடம் அப்பெண் கூறியுள்ளார்.
இதனையடுத்து அதே கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்த, அதே விடுதியில் தங்கியிருந்த காஞ்சிபுரம் மாடவாக்கத்தைச் சேர்ந்த ஜெரோம் கதிரவன் (22) என்பவரை அழைத்து, அப்பெண்ணிற்குத் தேவையான உணவு மற்றும் மருந்துகளை வாங்கி வர ஆஷீஷ் கூறியுள்ளார். அந்த நேரத்தில் ஆஷீஷ் மற்றும் ஜெரோம் கதிரவன் இருவரும் அப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், எனவே இந்த இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பெண் காவல் துறையில் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் ஆஷீஷ் மற்றும் ஜெரோம் கதிரவன் ஆகிய இருவரையும் மதுரை மாநகர் அனைத்து மகளிர் நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கீதாலெட்சுமி கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க: 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த திமுக கவுன்சிலர் கைது!