மதுரை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 700 கைதிகள் விடுதலை செய்யப்படுவார் என்று அறிவித்திருந்தார். அதனடிப்படையில், மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளில் ஆயுள் தண்டனை கைதிகள் நாள் கைதிகள் மற்றும் அவர்களின் நன்னடத்தை தொடர்பான விவரங்களை உடனடியாக அனுப்பி வைக்கும்படி, சிறைத்துறை டி.ஜி.பி. அலுவலகத்துக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
அதனடிப்படையில் மதுரை மத்திய சிறையில் உள்ள 22 ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட்டனர். விடுதலையானவர்கள் ஒவ்வொருவருக்கும் மரக்கன்றுகள் கொடுத்து சிறைத்துறை அலுவலர்கள் அவர்களை வழி அனுப்பி வைத்தனர். அவர்களது உறவினர்கள் மகிழ்ச்சியுடன் அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க:திமுகவில் இணைகிறாரா நயினார் நாகேந்திரன்? ; நெல்லை அரசியலில் பரபரப்பு..