ETV Bharat / state

‘திமுகவின் வெற்றிக்கு டிடிவி தினகரன் உதவியிருக்கிறார்’ - ராஜன் செல்லப்பா - su.venkatesan

மதுரை: சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா அளித்துள்ள பேட்டியில், டிடிவி தினகரன் திமுக வெற்றிக்கு உதவி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

rajan chellappa
author img

By

Published : May 24, 2019, 10:15 PM IST

மதுரை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ராஜன் செல்லப்பா தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “அதிமுகவுக்கு தேவையான இடங்கள் இடைத்தேர்தலில் கிடைத்துள்ளது, ஆட்சி தொடர வேண்டும் என மக்கள் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும் அதிமுக ஆட்சி தொடரும், ஸ்டாலின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என சொன்னார், அதற்கான வாய்ப்பு இல்லை. திமுகவில் வெற்றிபெற்ற எம்.பி க்கள் மக்களுக்கு ஒன்றும் செய்ய போவதில்லை.

ராஜன் செல்லப்பா பேட்டி

அதிமுக தோல்வி குறித்து கவலை கொள்ளவில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி என்ன தவறு செய்தது என தெரியவில்லை. மதுரை மக்களவைத் தொகுதியில் இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருந்தால் வெற்றி கிடைத்து இருக்கும். சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு வாழ்த்துகள், அவர் நாடாளுமன்றத்தில் பேச மட்டுமே முடியும், திட்டங்களை அதிமுக மட்டுமே கொண்டு வர முடியும். சு.வெங்கடேசன் மக்களுக்காக கொண்டு வரக்கூடியத் திட்டங்களை தடுக்கக்கூடாது, கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களித்து மக்கள் சிறு தவறு செய்துள்ளார்கள். மதுரையில் தொழில் வளம் குறைந்ததற்கு கம்யூனிஸ்ட் கட்சி தான் காரணம். சு.வெங்கடேசன் மக்கள் பணியாற்ற வேண்டும், திமுக பெற்றுள்ள வெற்றி ஓர் மாயை, உண்மையான வெற்றி அதிமுகவுக்கு மட்டுமே. அதிமுகவில் தகுதி படைத்தவர்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது, எம்.பி சீட்டை நாங்கள் போராடி வாங்கவில்லை. அதிமுகவுக்குள் சில நேரங்களில் சலசலப்பு நடப்பது வாடிக்கையானதுதான்” என்றார்.

மேலும், தினகரன் அரசியல் வரலாறு முடிவுக்கு வந்துள்ளது என்றும், அவர் வசம் உள்ள அதிமுக தொண்டர்கள் அதிமுகவுக்கு திரும்ப வேண்டும் எனவும், தினகரன் திமுகவின் வெற்றிக்கு உதவி செய்துள்ளார் எனவும் கூறியுள்ளார்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
24.05.2019

மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு.ராஜன் செல்லப்பா அவர்களின் செய்தியாளர்கள் சந்திப்பு :

அதிமுகவுக்கு தேவையான இடங்கள் இடைத்தேர்தலில் கிடைத்துள்ளது, ஆட்சி தொடர வேண்டும் என மக்கள் வாய்ப்பை ஏற்ப்படுத்தி கொடுத்து உள்ளார்கள், 2 ஆண்டுகளுக்கும் அதற்கு பிறகும் அதிமுக ஆட்சி தொடரும், ஸ்டாலின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என சொன்னார், ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை, திமுகவில் பல நிர்வாகிகள் விரக்தியில் உள்ளனர், திமுகவில் வெற்றி பெற்ற எம்.பி க்கள் மக்களுக்கு ஒன்றும் செய்ய போவதில்லை, அதிமுக தோல்வி குறித்து கவலை கொள்ளவில்லை, 1980 ல் 2 இடங்களை இழந்து அதிமுக ஆட்சியை இழந்தோம், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி என்ன தவறு செய்தது என தெரியவில்லை, மதுரை மக்களவை தொகுதியில் இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருந்தால் வெற்றி கிடைத்து இருக்கும், சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு வாழ்த்துகள், சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் பேச மட்டுமே முடியும், திட்டங்களை அதிமுக மட்டுமே கொண்டு வர முடியும், சு.வெங்கடேசன் மக்களுக்கான கொண்டு வர கூடிய திட்டங்களை தடுக்க கூடாது, கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களித்து மக்கள் சிறு தவறு செய்து உள்ளார்கள், மதுரையில் தொழில் வளம் குறைந்தற்கு கம்யூனிஸ்ட் கட்சி தான் காரணம், சு.வெங்கடேசன் மக்கள் பணியாற்ற வேண்டும், திமுக பெற்றுள்ள வெற்றி ஒர் மாயை, உண்மையான வெற்றி அதிமுகவுக்கு மட்டுமே, அதிமுகவில் தகுதி படைத்தவர்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது, எம்.பி சீட்டை நாங்கள் போராடி வாங்கவில்லை, அதிமுகவுக்குள் சில நேரங்களில் சலசலப்பு நடப்பது வாடிக்கையான து தான் இது இயல்பான சகஜம், தினகரன் அரசியல் வரலாறு முடிவுக்கு வந்துள்ளது, தினகரனுக்கு முடிவு கட்டும் தேர்தலாக அமைந்துள்ளது, தினகரன் வசம் உள்ள அதிமுக தொண்டர்கள் அதிமுகவுக்கு திரும்ப வேண்டும், தினகரனை அதிமுகவில் இணைப்பதை அதிமுக தலைமை தான் முடிவு செய்வார்கள், தினகரன் திமுகவின் வெற்றிக்கு உதவி உள்ளார், இதற்கு உதாரணம் ஆண்டிப்பட்டி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகள், தினகரன் நினைத்து நடக்கவில்லை, அதிமுகவை அழிக்க நினைத்து தேர்தலில் போட்டியிட்டார், தேர்தலில் பொதுவுடைமை தத்துவம் தோற்றுவிட்டது, மதுரையில் தேர்தல் நடைபெற கூடாது என கம்யூனிஸ்ட் கட்சி பல இடையூறு செய்தது, மதுரையில் அதிமுகவின் தோல்வி அலையாக இல்லை, பொய் பிரச்சாரத்தின் காரணமாகவே, அதிமுகவுக்கு எதிராக 3 சட்டமன்ற உறுப்பினர்கள் செல்ல மாட்டார்கள் என நினைக்கிறேன், தினகரன் 18 சட்டமன்ற உறுப்பினர்களை இழந்து விட்டு திமுகவுக்காக 3 இடங்களை வாரி கொடுத்து உள்ளார், தோப்பு வெங்கடாசலம் அதிமுகவின் நலன் கருதியே முதல்வரிடம் பேசி உள்ளார், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசனுக்காக கிடைத்த வாக்குகள் இல்லை, மக்கள் நீதி மய்யத்தில் கட்டமைப்புகள் ஏதுமில்லை, மக்கள் நீதி மய்யத்தின் வாக்குகள் ஊடக விவாதங்களில் பேச உதவும், அதிமுகவுக்கு எதிரான பிரச்சினை வரும்போது இ.பி.எஸ் - ஒ.பி.எஸ் ராஜதந்திரத்தை கையாளுவார்கள், ஜெயலலிதா இல்லாத நேரத்தில் தேர்தலில் போட்டியிட்டு உள்ளோம், பல தடைகளை தாண்டி தேர்தலில் போட்டியிட்டோம், அதிமுகவின் வாக்கு வங்கி குறையவில்லை, மக்களின் மனநிலை ஒரே நாளில் மாறக்கூடும், தமிழக வாழ்வாதார பிரச்சினைகளில் நாடாளுமன்றத்தில் திமுக என்ன செய்ய போகிறது என பார்ப்போம், அதிமுகவில் சரியான தலைமை உள்ளது, ஒன்றை தலைமை வேண்டுமா, வேண்டாமா என அதிமுக தலைமை தான் முடிவு செய்யும், சு.வெங்கடேசன் மதுரையின் மாறுபட்ட கலாச்சாரத்தை கொண்டு வந்தால் அதை மக்களே எதிர்ப்பார்கள்" என கூறினார், முன்னதாக அதிமுகவின் மதுரை மக்களவை தொகுதி வேட்பாளர் ராஜ்சத்யன் மற்றும் திருப்பரங்குன்றம் வேட்பாளர் முனியாண்டி ஆகியோர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள்.

Visual send in ftp
Visual name : TN_MDU_01_24_SELLAPPA PRESS MEET_TN10003

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.