மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், "எடப்பாடி பழனிசாமி அரசு மே23 ஆம் தேதி அன்று இருக்காது. அவர்களுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. 18 பேர் தகுதி நீக்கத்தின்போதே திமுக நியாயமாக இருந்திருந்தால், அப்போது சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்திருக்கலாம். 3 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தூண்டுவதுபோல திமுக செயல்படுகிறது. அரசு ஒப்பந்தங்களில் திமுகவும் - எடப்பாடியும் கூட்டாக உள்ளனர். கொறடா மனு கொடுத்த அன்றே திமுக சபாநாயகருக்கு எதிராக மனு அளித்திருக்க வேண்டும்.
எடப்பாடி அரசு தானாகவே கவிழும். தேர்தல் முடிவு பழனிசாமி ராஜினாமா செய்யக்கூடிய நிலைக்கு தள்ளும். அதிமுக மீதான சட்டப்போராட்டம் சசிகலா மூலமாக தொடர்கிறது. 3 எம்எல்ஏக்களும் அமமுக கட்சியாக அறிவிப்பதற்கு முன்பாக மட்டுமே பரப்புரை மேற்கொண்டனர். மோடியின் ஏஜெண்டாக ஓபிஎஸ் உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது வாரணாசி பயணம். அதிமுக கொடியின் நடுவே காவி வண்ணமும், தாமரையும் இடம்பெற்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அனைத்து தொகுதிகளிலும் பணம் கொடுத்தாலும் அதிமுக வெற்றி பெறாது. 22 தொகுதிகளிலும் அமமுக வெற்றி பெறும்.", என்றார்.