திருச்சி மாவட்டம் பாரத மிகுமின் நிறுவன குடியிருப்பில் வசித்துவந்தவர் மகாலட்சுமி (60). அவருடைய மகன் BHEL நிறுவனத்தில் பணிபுரிந்துவந்ததால் அவர், பணிக்குச் சென்ற பின்பு மகாலட்சுமி வீட்டில் தனியாகயிருப்பார். அப்படி 2011ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி அவர் வீட்டில் தனியாக இருந்தபோது, அவருடைய மகனுக்குப் பழக்கமான ஓட்டுநர் முரளி என்பவர் கார்த்திக் என்ற கூட்டாளியுடன் வீட்டுக்குள் புகுந்து மகாலட்சுமியை கொலைசெய்துவிட்டு, அவர் கழுத்திலிருந்த 16 பவுன் தங்கச்சங்கிலியை கொள்ளையடித்துச் சென்றனர்.
அதைத்தொடர்ந்து திருச்சி BHEL காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து இருவரையும் கைது செய்தனர். அதன்பின் குற்றவாளிகள் திருச்சி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். அந்த விடுதலையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் காவல் துறை சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல்செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ராஜா, புகழேந்தி அமர்வு நகைக்காக மூதாட்டியை கொலைசெய்த முரளி என்பவருக்கு ஆயுள் தண்டனையும், கார்த்திக் என்பவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: மருத்துவர்களின் அலட்சியத்தால் மனைவி உயிரிழந்த வழக்கு - பதிலளிக்க உத்தரவு..!