ETV Bharat / state

ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் வந்த விவகாரம் - ரயில்வே மேலாளர் பணியிட மாற்றம்! - கள்ளிக்குடி ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் வந்த விவகாரம்

மதுரை: ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் வந்த விவகாரத்தில் மூன்று ரயில்வே அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மதுரை கோட்ட இயக்க மேலாளர் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Train
author img

By

Published : May 12, 2019, 10:11 PM IST

மதுரை அருகே உள்ள கள்ளிக்குடியில் கடந்த 8ஆம் தேதியன்று சிக்னல் மற்றும் மொழி பிரச்னையால் ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே இரண்டு ரயில்கள் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும், ரயில் ஓட்டுநர்கள் சுதாரித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து, கவனக்குறைவாக செயல்பட்ட, கள்ளிக்குடி ரயில் நிலைய அலுவலர் தீப் சிங், திருமங்கலம் ரயில் நிலைய அலுவலர் ஜெயக்குமார், ரயில் கட்டுப்பாட்டு அறை அலுவலர் முருகானந்தம் உட்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தொடர்ந்து இச்சம்வம் குறித்து ரயில்வே தலைமை பாதுகாப்பு அலுவலர் ஆர்.கே.மேத்தா தலைமையிலான உயர்மட்டக் குழு விசாரணை நடத்தியது. இந்நிலையில், தற்போது மதுரை கோட்ட இயக்க மேலாளர்(ஒருங்கிணைப்பு) பிரேம்குமார், திருச்சிக்கு பணியிட மாற்றம் செய்து தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
12.05.2019

*ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் வந்த விவகாரம் தொடர்பாக மேலும் ஒருவர் பணியிட மாற்றம்*

அதிகாரிகளின் கவனக்குறைவால்  கடந்த 8 ஆம் தேதி   மதுரை அருகே உள்ள கள்ளிக்குடியில் சிக்னல் மற்றும் மொழி பிரச்சினையால்   ஒரே தண்ட வாளத்தின்  எதிர் எதிரே இரு ரெயில்கள் வந்ததால் பரபரப்பு : பெரும் விபத்து தவிர்ப்பு ...

இது குறித்து ரெயில்வே தலைமை பாதுகாப்பு அலுவலர்  R.K.மேத்தா தலைமையில் உயர்மட்ட குழு விசாரணை நடத்தியது. 

இதில் மதுரை கோட்ட உயக்க மேலாளர்( ஒருங்கிணைப்பு)  பிரேம்குமார் திருச்சிக்கு  பணியிட   மாற்றம்  செய்து தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயின் உத்தரவு .

இதற்கு முன்னதாக சம்பவம் தொடர்பாக,  கள்ளிக்குடி இரயில் நிலைய அதிகாரி தீப் சிங்,  திருமங்கலம் ரயில் நிலைய அதிகாரி ஜெயக்குமார், கட்டுப்பாட்டு அதிகாரி முருகானந்தம் உட்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.