ETV Bharat / state

ஷேர் ஆட்டோவில் சென்றால் கூட தலைக்கவசமா?: அபராதம் விதித்த போக்குவரத்து காவல் துறை - தலைக்கவசம் அணியாத ஷேர் ஆட்டோ ஓட்டுநருக்கு அபராதம்

மதுரை: தலைக்கவசம் அணியாமல் வந்ததாக ஷேர் ஆட்டோ ஓட்டுநருக்கு போக்குவரத்து காவல் துறையினர் 200 ரூபாய் அபராதம் விதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷேர் ஆட்டோ
auto
author img

By

Published : Oct 25, 2020, 3:52 PM IST

மதுரை சோலைஅழகுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காந்தி. ஆட்டோ ஓட்டுநரான இவர், கடந்த மாதம் 15ஆம் தேதி தேனிக்கு சென்றுவிட்டு உசிலம்பட்டி வழியாக மதுரை வந்து கொண்டிருந்தபோது, தேவர்சிலை அருகே வாகன தணிக்கையில் இருந்த போக்குவரத்து காவல் துறையினர் இவரது ஷேர் ஆட்டோவை வழிமறித்து சோதனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சோதனையில் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்த சூழலில் இவரது வாகன எண்ணைக் குறித்துவிட்டு அனுப்பி வைத்தாக கூறப்படுகிறது. வீட்டிற்கு சென்றதும் உசிலம்பட்டி போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் விதித்துள்ளதாக செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.

அபராதத் தொகையைச் செலுத்த மறந்த காந்தி நேற்று (அக்.,25) அபராதம் செலுத்துவதற்காக மதுரை சோலை அழகுபுரம் பகுதியில் உள்ள ஒரு கணினி மையத்திற்கு சென்றார். அபராதம் செலுத்த முயன்ற போதுதான் ஏன் அபராதம் விதித்தனர் என்பதை தெரிந்து கொண்டார்.

recipt
ரசீது

ஆட்டோவில் சென்ற ஓட்டுநருக்கு தலைக்கவசம் அணியவில்லை என இருபிரிவுகளில் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் காட்டுத் தீ போல சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

rule breaking statemnet
விதிமீறல் அறிக்கை

மதுரையில் கடந்த மாதங்களில் மட்டும் 20க்கும் மேற்பட்ட அபராதங்களில் இது போன்ற குளறுபடிகள் நடந்துள்ளதாகவும், சோதனை செய்யும் இடத்திலேயே அபராத சலான் வழங்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்ட போதும் இது போன்ற தவறுகள் அடிக்கடி நிகழ்வதை தமிழ்நாடு காவல் துறை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:ஆட்டோ எண்ணை இருசக்கர வாகனம் என குறிப்பிட்டு அபராதம் விதித்த காவல் துறை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.