ETV Bharat / state

மதுரை அருகே பாரம்பரிய மீன்பிடித் திருவிழா: பொதுமக்கள் உற்சாகம்

author img

By

Published : Apr 13, 2021, 9:00 AM IST

Updated : Apr 13, 2021, 10:05 AM IST

மதுரை: மேலூர் அருகே நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடித் திருவிழாவில் வலை, கச்சா உள்ளிட்ட உபகரணங்களைக் கொண்டு சாதி, மத பேதமின்றி மீன்களைப் பிடித்து பொதுமக்கள் உற்சாகம் அடைந்தனர்.

பாரம்பரிய மீன்பிடித் திருவிழா
பாரம்பரிய மீன்பிடித் திருவிழா

மதுரை மாவட்டம் மேலூர் அருகே குன்னாரம்பட்டியில் பாரம்பரியமிக்க மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. அங்குள்ள ராஜனேரி கண்மாய் 10 ஆண்டுகளுக்குப் பிறகு வடகிழக்குப் பருவமழையால் கடந்தாண்டு நிரம்பியது.

தற்போது கோடை காலம் தொடங்கி தண்ணீர் வற்றிய நிலையில் கண்மாயில் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீன்பிடித் திருவிழா நடத்தப்பட்டது.

கிராமப் பெரியவர்கள் முன்னிலையில் தொடர்ந்து கண்மாய் கரையில் தயாராக நின்றுகொண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வலை, கச்சா, ஊத்தா உள்ளிட்ட உபகரணங்களைக் கொண்டு சாதி, மத பேதமின்றி மீன்களைப் பிடிக்க இறங்கினர்.

பாரம்பரிய மீன்பிடித் திருவிழா
பாரம்பரிய மீன்பிடித் திருவிழா

இதில் நாட்டுவகை மீன்களான கட்லா, ரோகு, கெழுத்தி, கெண்டை, குரவை உள்ளிட்டவை சிக்கின. அவற்றைப் பொதுமக்கள் உற்சாகமாகப் பிடித்தனர். இங்கு பிடிக்கப்பட்ட மீன்களைப் பொதுமக்கள் விற்பனை செய்யாமல் தங்களது வீடுகளில் சமைத்து இறைவனுக்குப் படைத்து உண்ணுவர்.

இதுபோன்று பாரம்பரியமிக்க மீன்பிடித் திருவிழா நடத்துவதால் மழைப்பொழிந்து வேளாண்மை செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

Last Updated : Apr 13, 2021, 10:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.