மதுரை: அதிமுகவின் சார்பாக மதுரையில் பிரமாண்டமாக மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 51 அடி உயர கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்தார். இந்த மாநாட்டிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து ரயில், கார், வேன்கள் மூலம் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் வருகை தந்திருந்தனர்.
மாநாடு நடக்கும் மதுரை வலையங்குளம் பகுதிக்கு, இரண்டு நாட்களுக்கு முன்பே 10,000 சமையல் கலைஞர்கள் அதிமுக மாநாட்டு பந்தலுக்கு வந்துர் மும்மரமாக சமையல் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக ஏ,பி,சி என மூன்று இடங்களில் தொண்டர்களுக்கு உணவு விநியோகம் செய்யப்பட்டது. ஒவ்வொரு உணவுக்கூடங்களிலும் 300 கவுண்டர்கள் மூலம் அதிமுக தொண்டர்களுக்கு உணவு விநியோகிக்கப்பட்டது.
புளியோதரை, சாம்பார் சாதம், தக்காளி சாதம் என மாநாட்டிற்கு வந்த தொண்டர்கள், அதிமுக நிர்வாகிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. ஆனால் உணவுகள் சரியில்லை எனவும் சரியாக வேக வைக்கப்படவில்லை என கூறி தொண்டர்கள் பலர் உணவுகளை கீழே கொட்ட தொடங்கினர். இதனால் பல இடங்களில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி, நேற்றைய மாநாட்டில் தயாரான உணவுகள் அண்டா, அண்டாவாக மாநாட்டுத் திடலில் கொட்டப்பட்டு உள்ளது.
மாநாட்டு மைதானத்தின் இரு புறத்திலும் உணவுகள் தயாரிக்கப்பட்ட உணவுகள் சுவையாக இல்லாததாலும், உணவு வேகாததாலும், தொண்டர்கள் இந்த உணவை சாப்பிடாமல் சென்றதால் டன் கணக்கில் உணவு அந்த திடலிலேயே கொட்டப்பட்டு உள்ளது.
அதிமுக மாநாட்டில் 3 லட்சம் தொண்டர்கள் வருகை புரிந்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவர்கள் எல்லோருக்கும் உணவு வழங்கப்பட்டிருந்தால் உணவு தட்டுப்பாடே ஏற்பட்டிருக்கும். ஆனால் உணவு சரியில்லாததால் அவர்கள் புளியோதரையை சாப்பிடவில்லை எனக் கூறப்படுகிறது.அதிமுக மாநாட்டில் டன் கணக்கில் உணவு வீணாக்கப்பட்டு இருப்பது பெரும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
மேலும், தொண்டர்களுக்கு தண்ணீர், ஜஸ், உணவுகள் வழங்கப்பட்ட பிளாஸ்டிக் வாட்டர் கேன்கள், கப், தட்டு உள்ளிட்டவை மைதானம் முழுவதும் சிதறிக் கிடந்தன. அவற்றை ஊழியர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் சுமார் 4 டன்னுக்கு மேல் சேகரிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : சாலைகளில் முடங்கிக் கிடக்கும் சென்னையின் அடையாளம்.. சைக்கிள் ரிக்ஷா ஓட்டுநர்கள் அரசுக்கு வைக்கும் கோரிக்கை.. மெட்ராஸ் டே சிறப்பு தொகுப்பு!