ETV Bharat / state

தமிழ் வழியில் படித்தவர்களை டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்வு செய்ய விலக்கு கோரிய மனு தள்ளுபடி - tnpsc group one exam selection on tamil based education

டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் வழியில் படித்தவர்களை 20 விழுக்காடு ஒதுக்கீட்டில் தேர்வு செய்ய வேண்டும் என்ற உத்தரவுக்கு டிஎன்பிஎஸ்சி விலக்கு கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்வு செய்ய விலக்கு கோரிய மனு தள்ளூபடி

author img

By

Published : Jul 20, 2021, 5:13 PM IST

Updated : Jul 20, 2021, 5:25 PM IST

மதுரை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வானையம் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி 1ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களை மட்டும்தான் 20 விழுக்காடு ஒதுக்கீட்டில் தேர்வு செய்ய வேண்டும் என கடந்த ஆண்டு உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி சார்பில் வெளியிடப்பட்ட குரூப் 1 முதல் நிலைத் தேர்வு முடிவுகள் வெளியானது. இந்தத் தேர்வில் மட்டும் 1ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களை 20 விழுக்காடு ஒதுக்கீட்டில் தேர்வு செய்ய வேண்டும் என்ற உத்தரவுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.

ஏற்கெனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. எனவே விலக்கு அளிக்க வேண்டும்" என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், "ஜனவரி 2020, குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. எனவே, இந்த ஒரு குரூப் 1 தேர்வுக்கு மட்டும் இந்த உத்தரவை செயல்படுத்த விலக்கு அளிக்க வேண்டும்" என வாதிட்டார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஆங்கில வழியில் படித்துவிட்டு, பட்டப்படிப்பு மட்டும் வேலைக்காக தமிழ் வழியில் படித்தவர்கள் வரலாமா? மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைகழகங்களில் பட்டப்படிப்பை தமிழ் வழியில் படித்ததற்கு முறைகேடாக, விதி மீறி சான்றிதழ் பெற்றுள்ளனர்" என தெரிவித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: மதுசூதனனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டரால் பரபரப்பு

Last Updated : Jul 20, 2021, 5:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.