மதுரை: மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், "தமிழ்நாட்டில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வை 16 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில் ராமேஸ்வரம் மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முதல் நூறு இடங்களில் வெற்றி பெற்றது தெரியவந்தது. இந்த தேர்வில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். சிபிஐ விசாரித்தால் தான் உண்மைகளை வெளிக்கொண்டுவர முடியும். எனவே குரூப் 4 முறைகேட்டில் அனைத்து உண்மைகளையும் கண்டறியவும், சிபிசிஐடி வசமுள்ள வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று (டிச.14) நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணன், வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை ரயில் நிலையத்திற்கு சுரங்கப்பாதை