ETV Bharat / state

அதிமுக ஆட்சியில் பத்திரப்பதிவுத்துறை ஊழல் துறையாக இருந்தது - அமைச்சர் மூர்த்தி - தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி

அதிமுக ஆட்சியில் பத்திரப்பதிவுத்துறை என்பது முழுவதும் ஊழல் துறையாக இருந்தது என தமிழ்நாடு அமைச்சர் மூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார்.

moorthy
moorthy
author img

By

Published : Jun 30, 2021, 6:48 AM IST

மதுரை: புதூர் பகுதியில் 5 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியை தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கூறியதாவது, 'தமிழ்நாட்டில் பத்திரப்பதிவுத்துறை என்பது ஊழல் துறையாக இருந்தது. அதனைத் தடுக்க 50 நாட்களில் பல்வேறு முயற்சிகளை செய்துவருகிறோம்.

அதிமுக ஆட்சியில் பத்திரப்பதிவு துறையில் ஆள்மாறாட்டம் நடைபெற்றது. போலியான பத்திரப்பதிவு போன்ற முறைகேடுகள் நடந்துள்ளன. அதன்மீது நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம்.

வெளிப்படைத்தன்மையோடு திமுக ஆட்சி

50 நாட்கள் ஆட்சி என்பது மக்கள் விரும்பும் ஆட்சியாக உள்ளது. திமுக அரசு வெளிப்படைத்தன்மையோடு செயல்படுகிறது. போலிப் பத்திரப்பதிவை தடுக்கும் வகையில் பத்திர பதிவுத்துறையும் வெளிப்படையாக செயல்பட்டு வருகிறது' என்றார்.

இதையும் படிங்க: பத்திரப்பதிவு மோசடி: அலுவலக உதவியாளர் உள்பட இருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.