ETV Bharat / state

கள்ளழகர் கோவிலுக்கு சொந்தமான பகுதிகளில் மது அருந்த தடை! - உயர்நீதிமன்றம் உத்தரவு - மதுரை

மதுரை: கள்ளழகர் கோவிலுக்கு சொந்தமான பகுதிகளில் மது அருந்த தடை விதித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை உயர் நீதிமன்றம்
author img

By

Published : Feb 5, 2019, 8:15 PM IST

சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," மதுரையின் சிறப்பு மிக்க கோவில்களில் ஒன்றான கள்ளழகர் கோவிலுக்கு சொந்தமாக, பல மண்டகப்படிகளும், பல கோடி மதிப்புள்ள சொத்துக்களும் உள்ளன. ஆனால் இவை முறையாக பராமரிக்கப்படுவதில்லை. அதனால் கோவிலின் சொத்துக்கள் பல தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இந்த சொத்துக்களை முறையாக பராமரித்தாலே, அதன் மூலம் வரும் வருவாயைக் கொண்டு அழகர் திருவிழாவை கோவில் நிர்வாகம் சிறப்பாக கொண்டாடலாம் என்பதால் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்கவும், அடிப்படை வசதிகளை செய்துதரவும், வனம் மற்றும் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை முன்வைத்து கடந்த 2018 நவம்பர் 16-ம் தேதி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகவே, எனது மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், அழகர் கோவில் பகுதியில் இருக்கும் விடுதிகள், முகம் சுளிக்கும் வகையில் அசுத்தமாகவும், சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாகவும் மாறி வருகிறது. இங்கு சிசிடிவி கேமராக்கள் இல்லை என்பதால் மது அருந்துபவர்களால் கோவிலுக்கு வருபவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் மதுரை கள்ளழகர் கோவிலுக்கு சொந்தமான பகுதிகளில் மது அருந்த தடை விதித்தும், கள்ளழகர் கோவில் பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கவும் உத்தரவிட்டனர். தொடர்ந்து கள்ளழகர் கோவிலுக்கு சொந்தமான மண்டபங்கள் எத்தனை? கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் எவ்வளவு? அவற்றை யார் நிர்வகித்து வருகிறார்கள்?

undefined

எவ்வளவு சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன? அவற்றை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று பல்வேறு கேள்வி எழுப்பி அது தொடர்பாக, இந்துசமய அறநிலையத்துறை ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.