ETV Bharat / state

விஷம் குடித்து காதல் ஜோடி தற்கொலை?

மதுரை: கே.கே.நகரில் உள்ள வண்டியூர் பூங்காவில் நேற்று காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஷம் அருந்தி காதல் ஜோடி தற்கொலை?
author img

By

Published : May 22, 2019, 8:05 AM IST

மதுரை கே.கே. நகரில் வண்டியூர் பூங்காவில், இறந்த நிலையில் ஆண் பெண் இருவரின் உடல் கிடப்பதாக காவல் துறைக்கு நடைபயிற்சி வந்தவர்கள் தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அவர்களை வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர். அதில், தங்களது மரணத்தில் யாருக்கும் தொடர்பு இல்லை என எழுதி வைத்துவிட்டு இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

முதல்கட்ட விசாரணையில் அவர்களின் பெயர் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன், சித்ரா என்பது தெரியவந்துள்ளது. இருவரும் தங்களது குடும்பத்தை விட்டு வந்து இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முயற்சித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

விஷம் அருந்தி காதல் ஜோடி தற்கொலை?

இந்நிலையில், இருவருமே விஷமருந்தி பூங்காவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களின் உடலை மீட்ட காவல் துறையினர் உடற்கூறாய்வுக்காக அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து, அண்ணாநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அண்ணாநகர் காவல் துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.