மதுரை மாட்டுத்தாவணி அருகே அமைந்துள்ளது மலர் சந்தை. இங்கு தென் மாவட்டங்கள் மட்டுமின்றி பல்வேறு நகரங்களிலிருந்து, பூக்கள் விற்பனைக்கு வருவது வழக்கம். அதில், நாள்தோறும் இச்சந்தையில் மல்லிகைப் பூக்கள் மட்டும் ஏறக்குறைய, 15 டன்கள் விற்பனைக்கு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மதுரையில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக மல்லிகைப் பூவின் விலை அதிகரித்து வருகிறது. அதன்படி, நேற்று (ஜனவரி 12) கிலோ 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று (ஜன.13) திடீரென 3000 ரூபாயை தொட்டது.
தொடர்ந்து மழை நீடித்தால், விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சந்தையிலிருந்து வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் மதுரை மல்லிகை ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: மழையின் காரணமாக வரத்து குறைவான மதுரை மல்லி:இன்றைய விலை ரூ.2000!