மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம் வெள்ளக்கல் பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் இருந்த குப்பை கிடங்கிற்கு அருகில் இரண்டு அடி நீளத்தில் சமாதி இருந்ததை பார்த்த, அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சமாதியை ஆய்வு செய்தனர். பின்னர் அப்பகுதி மக்கள் உதவியோடு தோண்டிப் பார்த்த போது, அதில் நாய் சடலம் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து காவல்துறையினர், மக்களை திசை திருப்பவே இதுபோன்ற செயலில் அடையாளம் தெரியாத நபர்கள் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்தனர். மேலும் திடீர் சமாதி உருவான தகவல் சுற்றுவட்டாரப் பகுதியில் காட்டூத்தீயை போல் பரவியதால் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வந்து சமாதியை பார்த்து விட்டுச் சென்றனர்.