தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. சென்னையில் கரோனா பாதிப்பு குறைந்துவரும் நிலையில், தற்போது பிற மாவட்டங்களில் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் இதுவரை ஐந்தாயிரத்து 400 பேருக்கு மேலாக கரோனா தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர்.
இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக மதுரை சுற்றுவட்டாரங்களில் கடந்த ஜூன் 24ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்றுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில், வரும் செவ்வாய்க் கிழமை (ஜூலை 14ஆம் தேதி நள்ளிரவு 12 மணி) வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
மேலும், ஜூலை 15ஆம் தேதி முதல் மற்ற மாவட்டங்களில் உள்ளது போன்று தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.