மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கூத்தியார்குண்டு என்னுமிடத்தில் அமைந்துள்ளது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு. இம்மையத்தில், மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் நெல் மூட்டைகள் சேமித்து வைக்கப்படுகிறது.
லாரிகள் மூலம் எடுத்து வரப்படும் நெல் மூட்டைகளை அங்குள்ள தற்காலிக சுமை தூக்கும் தொழிலாளர்கள் 200க்கும் மேற்பட்டோர், கிட்டங்கியில் இறக்கி சேமித்து வைக்கும் பணியில் ஈடுபடுவர். அவ்வாறு சுமை தூக்கும் தொழிலாளர்கள் செய்யும் பணிக்கு ஆண்டுதோறும் தீபாவளியன்று அளிக்கக்கூடிய போனஸ் தொகை, இதுவரை அளிக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
அதுமட்டுமில்லாமல் தொழிலாளர்கள் காயம்பட்டால் முதல் உதவி சிகிச்சை மையம் கூட அளிக்க அங்கு வசதியில்லை என்றும் குடிநீர், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட அங்கு ஏற்படுத்தப்படவில்லை எனவும் கூறி, சுமை தூக்கும் தொழிலாளர்கள் இன்று தங்களது பணியைப் புறக்கணித்து வாயில் முன்பு அமர்ந்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அப்பகுதியில் நெல் மூட்டைகளுடன் வந்த லாரிகள் சாலையில் தஞ்சமடைந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'தடியடி நடத்திவிட்டு இஸ்லாமியர்கள் மீதே அரசு பழிபோடுகிறது' - ராமகிருட்டிணன்