கரோனா நோய்த்தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாத்திடும் வகையில் கபசுரக் குடிநீர் மற்றும் ஹோமியோபதி நோயெதிர்ப்பு மருந்தான ஆர்சனிகம் ஆல்பம் 30 உள்ளிட்டவைகளை தமிழ்நாடு அரசு பரிந்துரைத்துள்ளது.
இந்நிலையில், திருமங்கலம் நீதிமன்ற வளாகத்தில் சார்பு நீதிபதி ஜான் சுந்தர் லால் சுரேஷ் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பாரதி கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ரேணுகா குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அருண் ஆகியோர் பொதுமக்களுக்கு இந்த நோயெதிர்ப்பு மருந்துகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில், வழக்குரைஞர்கள், ஹோமியோபதி பயிற்சி மருத்துவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.