கரோனா பரவலைத் தடுக்கும் நோக்குடன் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. அதன்படி, ஊரடங்கு உத்தரவை மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. சமூக பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் கையாளப்பட்டுவருகின்றன.
அதன்படி அத்தியாவசியப் பொருட்களை விற்பவர்கள், வாங்குபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதையடுத்து, திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினருடன் இணைந்து அப்பகுதி காய்கறி மார்கெட்டில் விழிப்புணர்வு பரப்புரையில் ஈடுபட்டார்.
அதில் அவர், காய்கறிகளை விற்பனை செய்பவர்கள் கையுறை அணியாமல் விற்பனை செய்வதால் அதன் மூலம் கரோனா பரவ வாய்ப்புள்ளது. அதனைத் தடுக்கும் நோக்குடன் விற்பனையாளர்கள் எளிய முறையில் பாலிதீன் கவர்களை கைகளில் மாட்டிக் கொண்டு விற்பனை செய்யலாம் என அறிவுரை வழங்கினார்.
இதையும் படிங்க: உயிரா? காய்கறியா? ஊரடங்கை மீறியவர்களை எச்சரித்த காவல்துறை!