ETV Bharat / state

பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் மதுரை முளைப்பாரி மண்டபம்! - mandbam recreation

மதுரை: 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த முளைப்பாரி மண்டபம் அதன் பழமை மாறாமல் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அப்பகுதி மக்களால் புதுப்பிக்கப்படுகிறது.

மதுரை மாவட்டச் செய்திகள்  மதுரை முளைப்பாறி மண்டபம்  madurai district news  three hundred years old mandabam  mandbam recreation  பழங்கா நத்தம் முளைப்பாறி மண்டபம்   three hundred years old mandabam
பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் பழங்காநத்தம் முளைப்பாரி மண்டபம்
author img

By

Published : Nov 29, 2019, 7:47 AM IST

மதுரை பழங்காநத்தத்தில் 300ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பழமையான சாவடி ஒன்று உள்ளது. நாளுக்கு நாள் சாலைகளில் உயரம் அதிகமானதையடுத்து சாவடி மண்ணுக்குள் புதையும் நிலை உருவானது. இந்நிலையில், சாவடியைப் பழமை மாறாமல் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டு, அப்பகுதி மக்களின் பங்களிப்போடு நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு, சாவடியை உயர்த்தும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் மூலம் தரை மட்டத்திலிருந்து ஆறரை அடிக்கு சாவடி உயர்த்தப்பட்டு வருகின்றது. 10 பேர் கொண்ட குழுவினரால் 200க்கும் மேற்பட்ட ஜாக்கிகளைப் பொருத்தி நடைபெறும் இப்பணிக்கு 25 லட்சம் ரூபாய் செலவு செய்யப்படுகிறது. கடந்த 60 நாட்களாக நடைபெற்று வந்த இந்த பணியானது தற்போது முடிவு பெறும் நிலையில் இருப்பதால், கல் தூண்களின் இடையே பொருத்தப்பட்டிருந்த செங்கற்களை அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் மதுரை - பழங்காநத்தம் முளைப்பாரி மண்டபம்

இந்தப்பணி முடிந்ததும் மேற்கூரையில் உள்ள சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணிகளும் நடைபெறவுள்ளன. இவைகளெல்லாம் முடிந்த பின்னர் ஜனவரி மாதம் தைப்பொங்கல் அன்று சிறப்பு வழிபாட்டிற்குப் பிறகு, சாவடியானது மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட உள்ளது.

இதையும் படிங்க: கோயில் இடங்களை ஆக்கிரமிப்பு செய்தால் குண்டர் சட்டம் பாயும் - திருதொண்டர்கள் சபை தலைவர்

Intro:ஆறரை அடிக்கு உயர்த்தப்படும் 300 ஆண்டு பழமையான முளைப்பாரி மண்டபம்

முந்நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த முளைப்பாரி மண்டபம் வாங்கிகள் கொண்டு ஆறரை அடி உயர்த்தப்படுகிறது.Body:ஆறரை அடிக்கு உயர்த்தப்படும் 300 ஆண்டு பழமையான முளைப்பாரி மண்டபம்

முந்நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த முளைப்பாரி மண்டபம் வாங்கிகள் கொண்டு ஆறரை அடி உயர்த்தப்படுகிறது.

மதுரை பழங்காநத்தத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பழமையான சாவடி ஒன்று உள்ளது.
நாளுக்கு நாள் சாலைகளின் உயரம் அதிகமானதை அடுத்து சாவடி மண்ணுக்குள் புதையும் நிலை உருவானது

இதனையடுத்து சாவடியை பழமை மாறாமல் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டு அப்பகுதி மக்களின் பங்களிப்போடு நவீன தொழில்நுட்பத்தை கொண்டும் ஜாக்கிகள் பயன்படுத்தியும் உயரத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் மூலம் தரை மட்டத்தில் இருந்து 6 1/2 அடி உயரத்திற்கு சாவடி உயர்த்தப்பட்டு வருகின்றது. இப்பணியில் 10 பேர் கொண்ட குழுவினர் 200-க்கும் மேற்பட்ட ஜாக்கிகளை பொருத்தி பணி செய்து வருகின்றனர். இதற்காக 25 இலட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டு வருகிறது

கடந்த 60 நாட்களாக நடைபெற்று வந்த இந்த பணியானது தற்போது முடிவு பெறும் நிலையில் இருப்பதால், கல் தூண்களின் இடையே பொருத்தப்பட்டிருந்த செங்கற்களை அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து மேற்கூரையில் உள்ள சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணிகளும் நடைபெற உள்ளன.

இப்பணிகள் முடிந்த பின்னர் ஜனவரி மாதம் தைப்பொங்கல் அன்று சிறப்பு வழிபாட்டிற்குப் பிறகு சாவடி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.