ETV Bharat / state

கரோனா பாதிப்பு: திருப்பரங்குன்றம் பௌர்ணமி கிரிவலம் திருவிழா ரத்து! - திருப்பரங்குன்றம் பௌர்ணமி கிரிவலம் திருவிழா

மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில், புரட்டாசி மாத பௌர்ணமி கிரிவலம், சுப்பிரமணியர் - தெய்வானை அம்மன் வீதி உலா திருவிழாக்கள், கரோனா தொற்றின் காரணமாக ரத்துசெய்யப்பட்டுள்ளன.

திருப்பரங்குன்றம் பௌர்ணமி கிரிவலம் திருவிழா ரத்து

author img

By

Published : Oct 1, 2020, 12:07 AM IST

மதுரை: முருகனின் ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில், புரட்டாசி மாத திருவிழாக்கள் கரோனா தொற்றின் காரணமாக ரத்துசெய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் பௌர்ணமி கிரிவலம் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் வரும் அக்டோபர் மாதம் 1, 5 ஆகிய தேதிகளில் முறையே நடைபெறவிருந்த புரட்டாசி மாத பௌர்ணமி கிரிவலம், சுப்பிரமணியர் - தெய்வானை அம்மன் வீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள், கரோனா தொற்றின் காரணமாக மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயில் நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பு

மேலும், நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்ட தேதிகளில் மக்கள் கிரிவலம் செல்ல வேண்டாம் எனவும், மலைப்பாதையில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 150 ஆண்டு பழமைவாய்ந்த கோயில் அழிப்பு: கல்லூரி நிர்வாகத்தின் மீது புகார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.