ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் நடைபெற்றது. நேற்று (ஜன.22) காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.
உண்டியல் எண்ணும் பணியானது இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் ராமசாமி, உண்டியல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது. காணிக்கையை அறநிலையத் துறை ஊழியர்கள், பொதுமக்கள், பக்தர்கள், குருகுல மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். காணிக்கை எண்ணும் பணிகள் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டது.
இதில் சுப்ரமணியசுவாமி கோயில் உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட பணம், நாணயங்கள், தங்கம், வெள்ளி, மலேசியா நாணயம் போன்றவை பொதுமக்கள் பார்வையில் தரம்பிரிக்கப்பட்டது.
இதில் 118 கிராம் தங்கமும், 366 கிராம் வெள்ளியும், 31 லட்சத்து 10 ஆயிரத்து 888 ரூபாய் பணம், மலேசிய நாணயங்கள் ஆகியவையும் காணிக்கையாக கணக்கிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாசாணியம்மன் கோயிலுக்கு கொண்டுவரப்பட்ட 92 அடி உயர கொடிமரம்!