கரோனா தொற்று பரவலைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் அனைத்துக் கோயில்களிலும் பக்தர்கள் வருகைக்கு தடைவிதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து கால பூஜைகள் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன.
அந்தவகையில், ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் அனுமதியானது கடந்த 23ஆம் தேதியுடன் நிறுத்திவைக்கப்பட்டு தொடர்ந்து ஆகம விதிப்படி எட்டு கால பூஜைகள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில், கோயிலின் முக்கிய திருவிழாவாகப் பார்க்கப்படும் பங்குனி திருவிழாவானது வருகின்ற மார்ச் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. குறிப்பாக கொடியேற்றத்தைக் காண்பதற்கு பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோயில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக இன்று உள்ளேயும், வெளியேயும் என கோயில் முழுவதுமாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
மேலும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாகப் பங்குனித் தேரோட்டம், திருக்கல்யாண நிகழ்ச்சிகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் கோயில் நிர்வாகத்தினர் திருவிழா குறித்து ஆலோசனை கூட்டமானது நடைபெற்று விவாதிக்கபட உள்ளது.
இதைத் தொடர்ந்து, மாநகரப் போக்குவரத்து காவல் துறை சார்பில் 144 தடை உத்தரவை மீறி வரும் வாகன ஓட்டிகளை நிறுத்தி கரோனா பரவலைக் கட்டுப்படுத்த விழிப்புணர்வு பெறும் வகையிலும், 144 தடை உத்தரவு குறித்து விளக்கமும் அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க:பெங்களூரில் காவலரைத் தாக்கிய இளைஞர்கள்... 144 தடையை மீறியதில் தகராறு!