ETV Bharat / state

'வாருங்கள் பறவைகளை ஆவணப்படுத்துவோம்' - மதுரை பறவை ஆர்வலர்களின் முயற்சி - Thiruparankundram is the only 45 species of birds

மதுரை: 'ஊர்வன அமைப்பினர்' நடத்திய பறவைகள் கணக்கெடுப்பில் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள சேம்மட்டான் கண்மாயில் 45 விதமான பறவைகள் வாழ்வதாக மனநெகிழ்வுடன் தெரிவித்தனர்.

birds
birds
author img

By

Published : Jan 22, 2020, 9:45 AM IST

உலகம் முழுவதுமுள்ள பறவை நல ஆர்வலர்கள் தங்கள் அருகினில் இருக்கும் பறவைகள் பற்றிய தகவல்களை ஈ பேர்ட் (E bird) என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள். இதன்மூலம் பறவைகள் எந்தெந்த மாதத்தில் எந்த இடங்களில் வசிக்கும், பறவைகள் பற்றிய முழு தகவல்களை சேகரிப்பதற்கு இது உதவியாக இருப்பதாக பறவைகள் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தற்போது பொங்கல் விடுமுறையையொட்டி பறவைகள் நல ஆர்வலர்களுடன் இணைந்து திருநகரைச் சேர்ந்த 'ஊர்வன அமைப்பினர்', மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகேயுள்ள சேம்மட்டான் கண்மாயில் பறவைகள் பற்றிய கணக்கெடுப்பை நடத்தினர். இந்த கணக்கெடுப்பின்படி, சேம்மட்டான் கண்மாயில் மட்டும் 45 வகையான பறவைகள் வாழ்வதாகத் தெரிவிக்கின்றனர். தற்போது, இந்தப் பறவைகள் குறித்த புகைப்படங்களுடன் கூடிய குறிப்புகளையும் சேகரித்துள்ளனர்.

விதவிதமான பறவைகள்

மேலும், இந்தக் குறிப்புகளை ஈ பேர்ட் இந்தியா (Ebirdindia) என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதாகவும் தெரிவித்துள்ளனர். உலக நாடுகளில் பறவைகள் பற்றிய கணக்கெடுப்பு கிறிஸ்துமஸ் விடுமுறை அன்று நடைபெறும். ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பொங்கல் விடுமுறை நாட்களில் பறவைகள் நல ஆர்வலர்கள் தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற கணக்கெடுப்புகளை நடத்துவதாக ஊர்வன அமைப்பினர் கூறுகின்றனர்.

பறவைகளை ஆவணப்படுத்தும் புகைப்படக்காரர்கள்

இந்தப் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தி இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதன் மூலம், பறவைகள் நல ஆர்வலர்கள் தங்கள் ஆராய்ச்சிகளையும் பறவைகள் குறித்த குறிப்புகள், அதன் வாழ்வியல் நடைமுறைகளையும் பற்றி ஆராய்வதற்கு உதவியாக இருக்கும் என்கின்றனர். இதனால், பறவைகள் வாழும் கண்மாய்கள், குளங்கள் அழியாமல் காக்கப்படுகிறது.

'45 பறவைகள் வாழ்வதாக தகவல்'

மேலும், 45 வகையான பறவைகள் வாழ்விடமாகக் கொண்டுள்ள சேம்மட்டான் கண்மாய் மிகவும் மாசடைந்து குப்பைகள், சாக்கடைகள் கலந்திருப்பது வேதனையளிக்கிறது. எனவே, இதனை பல பறவைகள் வந்து வாழக்கூடிய இடமாக மாற்ற வேண்டும் என ஊர்வன அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:

சிஏஏவுக்கு எதிரான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

Intro:*ஊர்வன அமைப்பினர் நடத்திய பறவைகள் கணக்கெடுப்பில் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள சேம்மட்டான் கண்மாயில் 45 விதமான பறவைகள் வாழ்வதாகவும் - மேலும் ebirdindia என்ற இணையதளத்தில் 45 பறவைகள் பற்றிய தகவல் புகைப்படங்களுடன் பதிவேற்றம் செய்துள்ளனர்*
Body:*ஊர்வன அமைப்பினர் நடத்திய பறவைகள் கணக்கெடுப்பில் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள சேம்மட்டான் கண்மாயில் 45 விதமான பறவைகள் வாழ்வதாகவும் - மேலும் ebirdindia என்ற இணையதளத்தில் 45 பறவைகள் பற்றிய தகவல் புகைப்படங்களுடன் பதிவேற்றம் செய்துள்ளனர்*

உலகம் முழுவதும் உள்ள பறவை நல ஆர்வலர்கள் தங்கள் அருகில் இருக்கும் பறவைகள் பற்றிய தகவல்கள் ebird என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்வார்கள் இதன்மூலம் பறவைகள் எந்தெந்த மாதத்தில் எந்த எந்த இடங்களில் வசிக்கும் பறவைகள் பற்றிய முழு தகவல்கள் சேகரிப்பதற்கு உதவியாக இருப்பதாக பறவைகள் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தற்போது பொங்கல் விடுமுறையையொட்டி பறவைகள் நல ஆர்வலர்களுடன் இணைந்து திருநகரை சேர்ந்த ஊர்வன அமைப்பினர் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சேம்மட்டான் கண்மாயில் பறவைகள் பற்றிய கணக்கெடுப்பை நடத்தினார்.

இந்த கணக்கெடுப்பின்படி சேம்மட்டான் கண்மாயில் மட்டும் 45 வகையான பறவைகள் வாழ்வதாகவும், இந்தப் பறவைகள் குறித்து புகைப்படங்களுடன் கூடிய குறிப்புகளை சேகரித்துள்ளனர். மேலும் இந்த குறிப்புகளை ebirdindia என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

மேலும் உலக நாடுகளில் பறவைகள் பற்றிய கணக்கெடுப்பு கிறிஸ்துமஸ் விடுமுறை அன்று நடைபெறும் என்றும், தமிழ்நாட்டைப் பொருத்தவரை பொங்கல் விடுமுறை நாட்களில் பறவைகள் நல ஆர்வலர்கள் தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற கணக்கெடுப்புகளை நடத்துவதாக ஊர்வன அமைப்பினர் கூறுகின்றனர்.

இந்தப் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தி இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதன் மூலம் பறவைகள் நல ஆர்வலர்கள் தங்கள் ஆராய்ச்சிகளையும் பறவைகள் குறித்த குறிப்புகளையும் அதன் வாழ்வியல் நடைமுறைகளை பற்றி ஆராய்வதற்கு உதவியாக இருப்பதாகவும், மேலும் பறவைகள் வாழும் கண்மாய்கள், குளங்கள் அழியாமல் இருப்பதற்கு உதவியாக இருக்கும் எனவும் ஊர்வன அமைப்பினர் கூறுகின்றனர்.

மேலும் 45 வகையான பறவைகள் வாழ்விடமாகக் கொண்டுள்ள சேம்மட்டான் கண்மாய் மிகவும் மாசடைந்து குப்பைகள், சாக்கடைகள் கலந்து இருப்பதாகவும் அதனை சரி செய்யவேண்டும் என்றும், மேலும் பல பறவைகள் இங்கு வந்து வாழக்கூடிய இடமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

பேட்டிகள்:

1. விஷ்வா (ஊர்வன அமைப்பு)
2. சேம்சங் கிருபாகரன் (கல்லூரி மாணவர் - ஊர்வன அமைப்பு)Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.