மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு பருவமழை காலங்களில் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவதற்கு வசதியாக திருமங்கலம் வைகை பிரதான கால்வாய் அமைக்கப்பட்டது.
இங்கிருந்து விரிவாக்கம் செய்யப்பட்ட வாகைக்குளம், பொன்னங்கலம், புக்கங்குளம், சித்தாளை உரப்பனூர் குதிரை சாரி குளம் செங்குளம், சாத்தங்குடி ஆகிய கண்மாய்கள் நீரின்றி வறண்டு உள்ளதால் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டுமென அப்பகுதியில் உள்ள திருமங்கலம் விவசாயிகள் குண்டாறு படிநிலை உபகோட்டம் உதவி செயற்பொறியாளரிடம் இன்று மனு அளித்தனர்.
தங்கள் கோரிக்கையை அரசு அலுவலர்கள் நிறைவேற்றவில்லை என்றால் அப்பகுதியில் உள்ள விவசாயிகளைத் திரட்டி மிகப்பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம் என்று எச்சரித்தனர்.
இதையும் படிங்க: "ஒரு கிலோ நகையைக் கணக்கு காட்டாத போலீசார்" - லலிதா ஜூவல்லரி கொள்ளையன் பகீர் வாக்குமூலம்