ETV Bharat / state

பசும்பொன் தேவரின் தங்கக் கவசம் கோயில் அறக்கட்டளை நிர்வாகத்திடம் ஒப்படைப்பு! - நிர்வாகத்திடம் ஒப்படைப்பு

Thevar Jayanthi: பசும்பொன் தேவர் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு, தங்க கவசத்தை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பசும்பொன் கோயில் அறக்கட்டளை நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 25, 2023, 3:59 PM IST

மதுரை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை (Thevar Jayanthi Guru pooja) முன்னிட்டு வருகின்ற 30ஆம் தேதி தேவர் குருபூஜை நடைபெறவுள்ளது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மரியாதை செலுத்த உள்ளார். இதனைத்தொடர்ந்து, மதுரை உயர்நீதிமன்றக்கிளை கடந்த 10.10.2023 அன்று அதிமுக சார்பில் வழங்கப்பட்ட தேவர் தங்க கவசத்தை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதனையொட்டி, அண்ணா நகர் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வங்கி மேலாளர் முன்னிலையில் கையெழுத்திட்டு தங்க கவசத்தை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தேவர் குருபூஜை விழாவிற்காக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கோயில் அறங்காவலரான காந்திமீனாளிடம் ஒப்படைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக துணை பொதுச் செயலாளர் நத்தம் விசுவநாதன், முன்னாள் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், டாக்டர் விஜயபாஸ்கர், டாக்டர் மணிகண்டன், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா, மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி வி ஆர்.ராஜ்சத்யன், இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி, கழக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் மற்றும் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், '2010ஆம் ஆண்டில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு தங்க முலாம் பூசப்பட்ட கவசத்தை அப்போதைய முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா வழங்கினார். இந்நிலையில், இந்த தங்க கவசம் தொடர்பாக நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வசம் இதனை ஒப்படைக்குமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனடிப்படையில், அக்கட்சியின் பொருளாளர் என்ற முறையில் திண்டுக்கல் சீனிவாசன் ஆகிய தன்னை வங்கியில் இருந்து தேவர் ஜெயந்தி விழாவிற்காக முறையாக வாங்கி வர உத்தரவிட்டு இருந்தார்' என்று தெரிவித்தார்.

தேவர் ஜெயந்தி குருபூஜை விழா, மருதுபாண்டியர் குருபூஜை உள்ளிட்டவைகள் காரணமாக ராமநாதபுரத்தில் கடந்த அக்டோபர் 23ஆம் தேி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மதுரையில் இருந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு அணிவிக்கப்படுவதற்காக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அளிக்கப்பட்ட தங்க கவசம் பலத்த போலீசாரின் பாதுகாப்புகளுக்கு மத்தியில் பசும்பொன் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 31 years of Devar Magan : சர்ச்சையும், பாராட்டும் சம அளவில் பெற்ற 'தேவர் மகன்'... 2ம் பாகம் எப்போது?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.