ETV Bharat / state

பேனர் வைப்பதில் தவறு இல்லை: அமைச்சர் செல்லூர் ராஜூ - அரசு திட்டங்களுக்கு பேனர் வைப்பதில் தவறு இல்லை

மதுரை: திருமணமோ, அரசு திட்டம் தொடர்பாகவோ விளம்பர பேனர் வைப்பதில் தவறேதும் இல்லை என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

செல்லூர் ராஜூ
author img

By

Published : Sep 14, 2019, 6:58 PM IST

மதுரை ஜீவா நகர், மீனாம்பிகை நகர் பகுதியில் உள்ள தெருக்களுக்கு புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணியினை தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். அந்த நிகழ்வினை தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், ’பேனர், பிளக்ஸ் விவகாரத்தில் அதிமுக தலைமை சொல்வதைக் கேட்டு நடப்போம். எங்கள் கட்சியினர் இராணுவக் கட்டுப்பாடு நிறைந்தவர்கள். அரசு அலுவலர்களுக்கு இதுதொடர்பாக ஆலோசனைகள் வழங்கியுள்ளோம். ஆனால் ஒரு திருமணமோ, அரசு சார்ந்த திட்டம் தொடர்பாக விளம்பர பலகை வைப்பதில் தவறேதும் இல்லை. எங்களால் எந்தப் பிரச்னையும் வராத அளவிற்கு நடந்து கொள்வோம்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர் சந்திப்பு

மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையிலும், திறமையை வளர்க்கும் விதமாகவும் பொதுத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 5ஆம் வகுப்பிலும் 8ஆம் வகுப்பிலும் பொதுத் தேர்வு எழுதுவதால் மேற்படிப்பிற்கு போட்டித் தேர்வுகள் எழுதும்போது அவர்களுக்கு தேர்வுகள் மீதான பயம் நீங்கிவிடும். இதனால்தான் பொதுத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சரின் வெளிநாடு சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது. ரூ.8000 கோடி முதலீடும், 37,000 பேருக்கு மேல் வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. பெட்டிக்கடை போல முதலீடு விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாது. 4ல் இருந்து 5 ஆண்டுகள் வரை முதலீடு செய்தவர்கள் நிறுவனங்களை நிறுவ காலம் பிடிக்கும். அதனை விரைவாக நடைபெறும் வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Intro:மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி.Body:ஏதாவது ஒரு விழா நடந்தால் அந்த விழா மற்றும் திட்டம் தொடர்பான விஷயங்களை மக்களுக்கு தெரியப்படுத்த ஒரு பேனர் விழா நடைபெறும் இடத்தில் வைப்பது நியாயமானது என மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி.Conclusion:ஏதாவது ஒரு விழா நடந்தால் அந்த விழா மற்றும் திட்டம் தொடர்பான விஷயங்களை மக்களுக்கு தெரியப்படுத்த ஒரு பேனர் விழா நடைபெறும் இடத்தில் வைப்பது நியாயமானது என மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி.

மதுரை ஜீவா நகர், மீனாம்பிகை நகர் பகுதியில் தெருக்களுக்கு புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணியினை தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ துவக்கி வைத்தார்.

ரூ 8 லட்சம் மதிப்பில் புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணியினை துவக்கி வைத்த
நிகழ்வினை தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசும் பொழுது,

1 ஆண்டிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் லோயர் கேம்பிலிருந்து குடிநீர் கிடைக்க உள்ளது.

100 வார்டுகளுக்கும் தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்து வருகிறோம்.

பேனர் பிளக்ஸ் விவகாரத்தில் தலைமை சொன்னால் அதை கேட்டு நடப்போம்.
கழகத்தினர் கட்டுப்பாடுகள் நிறைந்தவர்கள்,

நீதிமன்றமும் நீதிபதியும் விபத்துகள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.

அனைத்து அதிகாரிகளுக்கும் சில அறிவுரைகளை வழங்கியுள்ளோம்.

எங்கள் கட்சியினர் இராணுவக்கட்டுப்பாடு நிறைந்தவர்கள்.

பேனர் வைக்க அனுமதி எங்கேயும் கிடையாது. பேனர் வைக்க அனுமதி இல்லை.

நடைமுறையில் ஒரு திருமணமோ திட்டத்தை தொடங்கி வைக்க திட்டம் தொடர்பான விளம்பர பலகை வைத்தால் தவறு இல்லை.

எங்களால் எந்தப்பிரச்சனையும் வராத அளவிற்கு நடந்து கொள்வோம்.

நெகிழியை ஒழிக்க வேண்டும் என்பதற்காக முதல்வர் நடவடிக்கை எடுத்தார். பொறியாளர்களுக்கு மாற்று சிந்தனையோடு வந்தார்கள் என்றால் அவருக்கு ஏற்பாடுகள் செய்து தரலாம்.

முதல்வரின் வெளிநாடு சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது.

8000 கோடி முதலீடும், 37000 பேருக்கு மேல் வவேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.

பெட்டிக்கடை போல முதலீடு விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாது.

4ல் இருந்து 5 ஆண்டுகள் வரை முதலீடு செய்தவர்கள் நிறுவனங்களை நிறுவ காலம் பிடிக்கும். அதனை விரைவாக நடைபெறும் வண்ணைம் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையிலும் அவர்களின் திறமையை வளர்க்கும் விதமாகவே பொதுதத்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

5ம் வகுப்பிலும் 8ம் வகுப்பிலும் பொது தேர்வு எழுதும் மாணவர்கள் பெரியவர்களாகி அவர்கள் போட்டி தேர்வுகள் எழுதும் போது அவர்களுக்கு தேர்வுகள் மீதான பயம் நீங்கி விடும்.

நடிகர்களின் படத்திற்கு தடை ஏற்படுத்தவே ஆன்லைன் டிக்கெட் முறையா என்ற கேள்விக்கு,

அது தவறான தகவல். எதிர்க்கட்சிகள் பரப்பும் பொய்யான தகவல். ஆன்லைன் டிக்கெட் முறை வரவேற்கதக்கது.

காலத்திற்கேற்ப மாற்றம் வர வேண்டும். 50 ரூ டிக்கெட்டை வெளியே 500 1000 என விற்பதை தடுக்கவே இந்தமுறையை செய்தித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். அது வரவேற்கதக்கது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.